M/s. ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு
இந்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதிக்கிறது
ஏப்ரல் 11, 2017 M/s. ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி, M/s. ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மீது, இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் சட்டப் பிரிவு எண் 58G(1)(b), படி (சட்டப் பிரிவு எண் 58B உட்பிரிவு 5(aa)-உடன்சேர்த்துப் படிக்க) அவ்வப்போது இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட வழிகாட்டுதல்கள் / ஆணைகளை மீறியதற்காக ரூ. 20.00 லட்சம் அபராதத்தை விதிக்கிறது. பின்புலம் இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934-ன் சட்டப்பிரிவு எண் 45N-ன் கீழ் நவம்பர் 2015-இல், இந்நிறுவனத்தில் உள்ள சில கடன் கணக்குகள் கூராய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் இந்நிறுவனம், இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் சட்டப் பிரிவு எண் 45-L ன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட நியாயமான நல்முறைப் பழக்கங்களுக்கான நெறிமுறை வழிகாட்டுதல்களை பின்பற்றாதது தெரியவந்துள்ளது. ஆகவே, இந்நிறுவனத்திற்கு விளக்கம் கோரி அபராதம் விதித்தல் குறித்து ஆகஸ்டு 01, 2016 அன்று கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கு நிறுவனம் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை.மேலும், பிப்ரவரி 14, 2017 அன்று இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் சட்டப்பிரிவு எண் 58G (2)-ன் படி நேரில் வந்து விளக்கமளிக்கவும் வாய்ப்பளிக்கப்பட்டது. இதில் உள்ள உண்மைகள், நிறுவனத்தின் பதில், அளித்த தகவல்கள் இவற்றை சீர்தூக்கிப் பார்த்தபின், நிறுவனத்தில் நடத்திய கூராய்வில் காணப்பட்ட முறைகேடுகள் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதாகக் கருதி, அபராதம் விதிக்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவெடுத்தது. அதன் காரணமாக நிறுவனத்தின் மீது ரூ. 20.00 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. (அஜித் பிரசாத்) பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2742 |
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: