நாசரேத் நகர கூட்டுறவு வங்கி லிமிடெட், தமிழ்நாடு, மீது இந்திய ரிசர்வ் வங்கி பண அபராத விதிப்பு
|
நகர கூட்டுறவு வங்கிகளுக்கான ஆர்பிஐயின் ‘இயக்குனர்கள் , அவர்களது உறவினர்கள் மற்றும் அவர்கள் தொடர்புள்ள நிறுவனங்களுக்கான கடன்கள் மற்றும் முன்பணங்கள் வழங்குதல்’ குறித்த வழிகாட்டுதல்களை கடைபிடிக்காததற்காக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), அக்டோபர் 10, 2024 தேதியிட்ட உத்தரவு மூலம், நாசரேத் நகர கூட்டுறவு வங்கி லிமிடெட் மீது ₹1,00,000 (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்) அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதமானது, இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 47 A (1) (c) உடன் இணைந்த பிரிவு 46 (4) (i) மற்றும் பிரிவு 56 இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி விதித்துள்ளது. மார்ச் 31, 2023 தேதி அன்று இருந்த வங்கியின் நிதி நிலை அடிப்படையில் இந்திய ரிசர்வ் வங்கி சட்டபூர்வ ஆய்வு நடத்தியது. மேற்பார்வை ஆய்வுகள் மற்றும் அது தொடர்பான கடிதங்களின் அடிப்படையில்ஆர்பிஐ வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காதது தெரிய வந்ததால், இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததற்காக வங்கி மீது ஏன் அபராதம் விதிக்கப்படக்கூடாது என்பதற்கான காரணத்தைக் கூற அறிவுறுத்தி அறிக்கை அனுப்பப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைக்கு வங்கியின் பதில் மற்றும் நேர்முக விசாரணையின் போது பெறப்பட்ட வாய்வழி சமர்ப்பிப்புகள் ஆகியவற்றை பரிசீலனை செய்ததில், கீழ்க்கண்ட குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட காரணத்தால், பண அபராதம் விதிக்கப்படவேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளது. (புனீத் பஞ்சோலி) பத்திரிகை வெளியீடு: 2024-2025/1347 |
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: