அறந்தாங்கி கூட்டுறவு நகர வங்கி லிமிடெட், தமிழ்நாடு மீது இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 22 அக்டோபர், 2025 அன்று வெளியிட்ட உத்தரவின் படி, “அறந்தாங்கி கூட்டுறவு நகர வங்கி லிமிடெட், தமிழ்நாடு” (வங்கி) மீது, RBI வெளியிட்ட “நகர கூட்டுறவு வங்கிகளின் பங்கு ஈவுத் தொகை பகிர்வு (Declaration of Dividend by UCBs)” குறித்த வழிகாட்டுதல்களை மீறியதற்காக ₹50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) பண அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதம், 1949 ஆம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 47A(1)(c), அதனுடன் இணைந்து படிக்கப்படும் பிரிவுகள் 46(4)(i) மற்றும் 56 ஆகியவற்றின் கீழ் RBI-க்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் விதிக்கப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 22 அக்டோபர், 2025 அன்று வெளியிட்ட உத்தரவின் படி, “அறந்தாங்கி கூட்டுறவு நகர வங்கி லிமிடெட், தமிழ்நாடு” (வங்கி) மீது, RBI வெளியிட்ட “நகர கூட்டுறவு வங்கிகளின் பங்கு ஈவுத் தொகை பகிர்வு (Declaration of Dividend by UCBs)” குறித்த வழிகாட்டுதல்களை மீறியதற்காக ₹50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) பண அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதம், 1949 ஆம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 47A(1)(c), அதனுடன் இணைந்து படிக்கப்படும் பிரிவுகள் 46(4)(i) மற்றும் 56 ஆகியவற்றின் கீழ் RBI-க்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் விதிக்கப்பட்டது. வங்கி, முந்தைய ஆண்டுகளின் லாபங்களை ஓர்சேர்த்து பங்கு ஈவுத்.தொகை வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது. இது வங்கி அதன் வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கத்துடனானதல்ல. மேலும், இந்த பண அபராதம் விதிக்கப்படுவது, வங்கிக்கு எதிராக ரிசர்வ் வங்கியால் தொடங்கப்படும் வேறு எந்த நடவடிக்கைக்கும் பாரபட்சம் இல்லாமல் இருக்கும். (பிரிஜ் ராஜ்) பத்திரிகை வெளியீடு: 2025-2026/1391 |
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: