RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

134427115

பத்திரிக்கை வெளியீடு தமிழ்நாடு, தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மீது இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதித்தது

வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 இன் பிரிவு 20 உடன் இணைத்து பிரிவு 56 இன் விதிகளை மீறியதற்காக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆகஸ்ட் 19, 2025 தேதியிட்ட உத்தரவின் மூலம், தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மீது ₹1 லட்சம் (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்) அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதம், 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 47 A (1) (c) உடன் இணைந்த பிரிவு 46 (4) (i) மற்றும் பிரிவு 56 இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி விதித்துள்ளது.

மார்ச் 31, 2024 தேதியில் வங்கியின் நிதி நிலை அடிப்படையில் வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி (நாபார்டு) சட்டபூர்வ ஆய்வு நடத்தியது. மேற்பார்வைக் கண்டுபிடிப்புகள் அறிக்கையை ஆய்வு செய்ததில், மேலே மேற்கோள் காட்டப்பட்ட விதிகளை மற்றும் அது தொடர்பான கடிதங்களின் அடிப்படையில், மேற்கூறிய விதிகளைப் பின்பற்றாததற்காக வங்கி மீது ஏன் அபராதம் விதிக்கப்படக்கூடாது என்பதற்கான காரணத்தைக் கூற அறிவுறுத்தி அறிக்கை அனுப்பப்பட்டது. அவ்வறிக்கைக்கு வங்கியின் பதில் மற்றும் தனிப்பட்ட விசாரணையின் போது பெறப்பட்ட வாய்வழி சமர்ப்பிப்புகள் ஆகியவற்றை பரிசீலனை செய்த போது, வங்கிக்கு எதிரான பின்வரும் குற்றச்சாட்டு நிரூபித்தால், பண அபராதம் விதிக்கப்படவேண்டும் என்ற முடிவுக்கு இந்திய ரிசர்வ் வங்கி வந்தது:

வங்கி, அதன் இயக்குநர்களுக்கு கடன்களை வழங்கியிருந்தது.

இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது. இது வங்கி அதன் வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கத்துடனானதல்ல. மேலும், இந்த பண அபராதம் விதிக்கப்படுவது, வங்கிக்கு எதிராக ரிசர்வ் வங்கியால் தொடங்கப்படும் வேறு எந்த நடவடிக்கைக்கும் பாரபட்சம் இல்லாமல் இருக்கும்.

(புனீத் பஞ்சோலி)     
தலைமை பொது மேலாளர்

பத்திரிகை வெளியீடு: 2025-2026/972

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?