கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நாகர்கோவில், தமிழ்நாடு மீது இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நாகர்கோவில், தமிழ்நாடு மீது இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது
22 மே 2023 கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நாகர்கோவில், தமிழ்நாடு மீது இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது. வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தக்கூடிய) பிரிவு 26A உடன் இணைந்த பிரிவு 56-இன் படி அமைக்கப்பட்ட வைப்பாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதி (டிஇஏ நிதி)-க்கு தகுதியான நிதிகளை மாற்றுவது சம்பந்தமான உத்தரவுகள் மற்றும் உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (கேஒய்சி) வழிகாட்டுதல், 2016 ஆகியவற்றை கடைபிடிக்காததற்காக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மே 18, 2023 தேதியிட்ட உத்தரவின் மூலம், கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நாகர்கோவில், தமிழ் நாடு மீது ₹7.50 லட்சம் (ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் மட்டும்) அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதம், இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 47 A (1) (c) உடன் இணைந்த பிரிவு 46 (4) (i) மற்றும் பிரிவு 56 இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, முன் கூறப்பட்ட விதிமுறைகளைக் கடைப்பிடிக்காததற்காக விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது. இது வங்கி அதன் வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கத்துடனானதல்ல. பின்னணி மார்ச் 31, 2021 தேதியிட்ட வங்கியின் நிதி நிலை அடிப்படையிலான இந்திய ரிசர்வ் வங்கியின் ஆய்வு அறிக்கையில், வங்கி தகுதி வாய்ந்த உரிமை கோரப்படாத வைப்புகளை டிஇஏ நிதிக்கு மாற்றவில்லையென்பதும் இடர் வகைப்பாடு தொடர்பான கேஒய்சி வழிகாட்டுதலின் விதிமுறைகளை மீறி ஒரே வாடிக்கையாளருக்கு பல வாடிக்கையாளர் அடையாள எண்களை ஒதுக்கியுள்ளதும் இன்னும் பிற தகவல்களும் தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில், மேற்கூறிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததற்காக வங்கி மீது ஏன் அபராதம் விதிக்கப்படக்கூடாது என்பதற்கான காரணத்தைக் கூற அறிவுறுத்தி அறிக்கை அனுப்பப்பட்டது. தனிப்பட்ட மற்றும் வாய்வழி சமர்ப்பிப்புகளின் பரிசீலனையில் வங்கி, இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளுக்கு கட்டுப்படாதது நிரூபிக்கப்பட்டதால், பண அபராதம் விதிக்கப்படவேண்டும் என்ற முடிவுக்கு இந்திய ரிசர்வ் வங்கி வந்துள்ளது. (யோகேஷ் தயாள்) செய்தி வெளியீடு: 2023-2024/263 |