தமிழ்நாடு, இராஜபாளையம் கூட்டுறவு நகர வங்கி லிமிடெட் மீது இந்திய ரிசர்வ் வங்கி பண அபராத விதிப்பு
|
நகர கூட்டுறவு வங்கிகளுக்கான ஆர்பிஐயின் ‘இயக்குனர்கள் குழு, உடன் இணைந்த இயக்குநர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் அவர்கள் தொடர்புள்ள நிறுவனங்களுக்கான கடன்கள் மற்றும் முன்பணங்கள் வழங்குதல், வெளிப்பாடு நியமங்கள், சட்டபூர்வ / இதர கட்டுப்பாடுகள்’ குறித்த வழிகாட்டுதல்களை கடைபிடிக்காததற்காக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), பிப்ரவரி 28, 2024 தேதியிட்ட உத்தரவு மூலம், இராஜபாளையம் கூட்டுறவு நகர வங்கி லிமிடெட் (வங்கி) மீது ₹75,000 (ரூபாய் எழுபத்தி ஐந்தாயிரம் மட்டும்) அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதமானது, இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 47 A (1) (c) உடன் இணைந்த பிரிவு 46 (4) (i) மற்றும் பிரிவு 56 இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி விதித்துள்ளது. (யோகேஷ் தயாள்) செய்தி வெளியீடு: 2023-2024/2137
|
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: