தமிழ்நாடு, திருமங்கலம், திருமங்கலம் கூட்டுறவு நகர வங்கி லிமிடெட் மீது இந்திய ரிசர்வ் வங்கி பண அபராத விதிப்பு - ஆர்பிஐ - Reserve Bank of India
தமிழ்நாடு, திருமங்கலம், திருமங்கலம் கூட்டுறவு நகர வங்கி லிமிடெட் மீது இந்திய ரிசர்வ் வங்கி பண அபராத விதிப்பு
நகர கூட்டுறவு வங்கிகளுக்கான ஆர்பிஐயின் ‘வெளிப்பாடு நியமங்கள், சட்டபூர்வ / இதர கட்டுப்பாடுகள்’ குறித்த வழிகாட்டுதல்களை கடைபிடிக்காததற்காக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), பிப்ரவரி 28, 2024 தேதியிட்ட உத்தரவு மூலம், திருப்பத்தூர் நகர கூட்டுறவு வங்கி லிமிடெட் (வங்கி) மீது ₹25,000 (ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம் மட்டும்) அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதமானது, இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 47 A (1) (c) உடன் இணைந்த பிரிவு 46 (4) (i) மற்றும் பிரிவு 56 இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி விதித்துள்ளது. மார்ச் 31, 2022 தேதி அன்று இருந்த வங்கியின் நிதி நிலை அடிப்படையில் இந்திய ரிசர்வ் வங்கி சட்டபூர்வ ஆய்வு நடத்தியது. மேற்பார்வை ஆய்வுகள் மற்றும் இது தொடர்பான கடிதப் போக்குவரத்துகள் மூலம் ஆர்பிஐ வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காதது தெரிய வந்ததால், இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததற்காக வங்கி மீது ஏன் அபராதம் விதிக்கப்படக்கூடாது என்பதற்கான காரணத்தைக் கூற அறிவுறுத்தி அறிக்கை அனுப்பப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைக்கு வங்கியின் பதில் மற்றும் நேர்முக விசாரணையின் போது பெறப்பட்ட வாய்வழி சமர்ப்பிப்புகள் ஆகியவற்றை பரிசீலனை செய்ததில், பெயரளவு உறுப்பினர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி கடன் வழங்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட காரணத்தால், பண அபராதம் விதிக்கப்படவேண்டும் என்ற முடிவுக்கு இந்திய ரிசர்வ் வங்கி வந்தது. இந்த நடவடிக்கை, ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது. இது, வங்கி அதன் வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கத்துடனானதல்ல. மேலும், இந்த பண அபராதம் விதிக்கப்படுவது, வங்கிக்கு எதிராக ரிசர்வ் வங்கியால் எடுக்கப்படும் வேறு எந்த நடவடிக்கைக்கும் பாரபட்சம் இல்லாமல் இருக்கும். (யோகேஷ் தயாள்) பத்திரிக்கை வெளியீடு: 2024-2025/38 |