RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S3

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78496749

500 மற்றும் 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்படுகின்றன

RBI/2016-17/115
DCM (Plg) No.1241/10.27.00/2016-17

நவம்பர் 09, 2016

தலைவர் / நிர்வாக இயக்குநர் / தலைமை நிர்வாக அதிகாரி
பொதுத்துறை வங்கிகள் / தனியார் துறை வங்கிகள் /
வெளிநாட்டு வங்கிகள் / பிராந்திய கிராமப்புற வங்கிகள் /
நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகள் / மாநிலக் கூட்டுறவு வங்கிகள்

அன்புடையீர்

500 மற்றும் 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும்
நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்படுகின்றன

எங்களின் நவம்பர் 08, 2016 தேதியிட்ட மேற்குறிப்பிட்ட பொருள்குறித்த சுற்ற்றிக்கை எண் DCM (Plg) No. 1226 / 10.27.00/2016-17-ஐப் பார்க்கவும். ATM-கள் மக்கள் பரிவர்த்தனைக்காகத் திறக்கப்படும்போது, அவைகள் ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகளை வழங்காமல் ரூ. 100 மற்றும் ரூ. 50 மதிப்பிலக்க நோட்டுகளை வழங்குவது உறுதிசெய்யப்படவேண்டியது அவசியமாகிறது. ஆகவே, பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

I. நவமபர் 11, 2016 முதல் ATM-கள் பரிவர்த்தனைகள் மீண்டும் திறக்கப்படும்.

ஸ்விட்ச் நிலையில் தேவைப்படும் மாற்றங்களை (வெளி முகவர்கள் மூலம் மேலாண்மை செய்யப்படும் நிலையிலும்) ATM-களில் செயல்படுத்தி, அவைகள் மூலம் ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் வழங்கப்படுவது நிறுத்தப்படவேண்டும். ATM-களில் இருப்பிலுள்ள குறிப்பிட்ட நோட்டுகள் உடனடியாகக் காலி செய்யப்படவேண்டும்.

II. ATM-களின் கணிப்புக் கூறுகள் மாற்றப்பட்டு ரூ.100 மற்றும் ரூ.50 மதிப்பிலக்க நோட்டுகள் வெளியிடப்படும்

வங்கிகள் தேவைப்பட்டால், தாங்கள் பணியமர்த்திய வெளியார் முகமைகள் மூலமும் பின்வருவனவற்றை உறுதி செய்திடவேண்டும்.

  1. உடனடியாக ரூ. 100 மதிப்பிலக்க நோட்டு வெளியிடப்படும் வகையில் ஒரு உள்ளடுக்குப் பெட்டியை ATM-ல் தயார் நிலையில் வைக்கவேண்டும்.

  2. மேற்குறிப்பிட்டதை செயல்படுத்தும் வகையில் தகுதியுள்ள (புதிய / புழக்கத்திற்கு மீண்டும் தகுதியுள்ள பழைய) நோட்டுகளை ATM-களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்திடவேண்டும்.

  3. கட்டுப்படியாகும் நிலையில் உள்ள ATM-களில் கூடுதல் உள்ளடுக்குப் பெட்டிகளைக் கொண்டு குறிப்பிட்ட மதிப்பிலக்கமில்லாத இதர நோட்டுகளை வழங்கும் வகையில், கணிப்புக் கூறுகளைத் திருத்தியமைத்தல்.

III. ஒரு நாளைக்கு ஒரு அட்டை மூலம் ரூ.2000 வரை மட்டும் ATM-ல் எடுக்கமுடியும்

ATM அட்டை மேலாண்மை நிறுவனங்கள் தேவையான மாற்றங்களை செய்து, அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட வங்கிக் கணினி சேவைகளில் மாற்றங்கள் செய்து பின்வருவனவற்றை உறுதி செய்திடவேண்டும்.

  1. ATM-களில் வாடிக்கையாளர் அட்டைகளைப் பயன்படுத்தி பணம் எடுக்கப்படும்போது, ஒரு அட்டைக்கு ரூ. 2,000 மட்டுமே ஒரு நாளைக்கு வழங்கப்படவேண்டும்.

  2. மேற்குறிப்பிட்ட வரம்போடு கூடவே, ஒட்டுமொத்தமாக ஒரு வாரத்திற்கு ரூ. 20,000 மட்டுமே (எல்லா சானல்கள் விற்பனை முனையங்கள், ATM-களில் எடுக்கப்படும் பணம் உட்பட) எடுக்கப்படுவது உறுதிசெய்யப்படவேண்டும்.

  3. இந்த வரம்புகள் மாற்றப்படும்போது, ATM கணிப்புக்கூறுகளிலும் மாற்றங்கள் செய்யப்படவேண்டும்.

IV. வங்கி வர்த்தகத் தொடர்பாளர்கள் மூலம் பணம் எடுத்தல்

வங்கித் தொடர்பாளர்கள் வங்கிகளின் முகவர்களாச் செயல்படுவதால் அவர்கள் உதவியால் MICRO ATM-கள் மற்றும் ஆதார் இணைந்து பணம் எடுக்கப்படும் முறைமைகள் மூலம் வாடிக்கையாளர் பணம் எடுக்க ஏதுவாக சரியான அறிவுறுத்தல்கள் வழங்கப்படவேண்டும். அவர்கள் குறிப்பிட்ட வங்கி நோட்டுகளுக்கு மாற்றாக இதர மதிப்பிலக்க நோட்டுகளை வழங்க இந்த அறிவுறுத்தல்களின்படி வங்கி முகப்புகளில் உள்ள வரம்புகள், நடைமுறைகள் அனுசரிக்கப்படவேண்டும் (நவம்பர் 08, 2016 தேதியிட்ட இந்திய அரசின் அரசாணையைப் பார்க்கவும்).

V. பண டெபாசிட் எந்திரங்கள் / பணச் சுழற்சி எந்திரங்கள் மூலம் டெபாசிட்டுகளைப் பெறுதல்

a) பண டெபாசிட் / சுழற்சி எந்திரங்களைப் பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டே செய்லபட அனுமதிக்கவேண்டும்.

  1. இந்த எந்திரங்கள் குறிப்பிட்ட மதிப்பிலக்க (500 மற்றும் 1000) நோட்டுகளை வழங்கக்கூடாது.

  2. இந்த எந்திரங்கள் டிசம்பர் 30, 2016 வரை மட்டுமே குறிப்பிட்ட மதிப்பிலக்க (500 மற்றும் 1000) நோட்டுகளை அட்டைகளைப் பயன்படுத்தி ஏற்கவேண்டும். அட்டையில்லாமல் அளிக்கப்படும் டெபாசிட்டுகளை அந்த எந்திரங்கள் ஏற்க்க்கூடாது. அதாவது மூன்றாம் நபருக்கான கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யக்கூடாது. மேற்குறிப்பிட்ட வகையில் செயல்பட இந்த எந்திரங்களின் கணிப்புக் கூறுகள் திருத்தியமைக்கப்படவேண்டும்.

b) இந்த எந்திரங்கள் இதர மதிப்பிலக்க நோட்டுகளை இதுவரையில் உள்ளது போலவே ATM பரிவர்த்தனைகளுக்காக தற்போது குறிப்பிடப்பட்டிருக்கும் வரம்புகளுக்குட்பட்டு ஏற்கவோ, வழங்கவோ செய்யலாம்.

VI. புதிய ரூ. 500 மற்றும் ரூ. 2000 மதிப்பிலக்க நோட்டுகளை ஏற்கவோ / வழங்கவோ தயார்நிலை

வங்கிகளின் ATM-கள் பணம் டெபாசிட் எந்திரங்கள் / சுழற்சி எந்திரங்கள் ஆகியவை மகாத்மா காந்தி (புதிய) வரிசை நோட்டுகளை (அவை புழக்கத்தில் விடப்பட்டதும்) ஏற்கவும் வழங்கவும் தயார் நிலையில் வைக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

2. மேற்குறிப்பிட்ட சுற்றறிக்கையின் 2(ii) மற்றும் 2(vi) பகுதிகளில் குறிப்பிட்டுள்ளபடி வங்கிகள் பின்வருமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். வெள்ளை வில்லை ATM நிர்வகிக்கும் குழுமங்கள் அந்த ATM-களுக்குப் பணம் வழங்கும் வங்கிகளிடம் (அவை ஆதரவு வங்கிகளாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்) அந்த ATM-களிலிருந்து எடுக்கப்பட்ட குறிப்பிட்ட (500 மற்றும் 1000) வங்கி நோட்டுகளை டெபாசிட் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

3. வாடிக்கையாளர் சேவைகளை மேம்படுத்தும்பொருட்டு, பின்வரும் கூடுதல் ஏற்பாடுகளைச் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

  1. நோட்டுகளை மாற்றிக்கொடுக்கும் சேவைகளை அளிக்கும்பொருட்டு வங்கி முகப்புகள் கூடுதல் நேரம் திறந்துவைக்கப்படவேண்டும்.

  2. நோட்டுகள் மாற்றும் வசதி குறித்த சந்தேகங்களுக்கு விடையளிக்கத் தொடர்பு தொலைபேசி சேவைகளை அளிக்கவேண்டும். இது குறித்த தகவல் வங்கிகளின் அறிவிப்புப் பலகை மற்றும் இணையதளத்தில் அளிக்கப்பட வேண்டும்.

  3. விற்பனை முனையங்களில் ரூ. 2000 வரம்பு வரை ஒரு அட்டையில் எடுக்க அனுமதிக்கப்படலாம். ஆனால், இது குறிப்பிடப்பட்ட வாராந்திர வரம்புக்குள் இருக்கவேண்டும்.

4. மறு ஆய்வின் பேரில் வங்கி வர்த்தகத் தொடர்பாளர்கள் உதவியுடன் நடத்தப்படும் நோட்டுமாற்றுப் பரிவர்த்தனைகளில் உரிய அறிவுறுத்தல்கள் (மேற்குறிப்பிட்ட நவம்பர் 08, 2016 தேதியிட்ட சுற்றறிக்கையின் பாரா 3(iv)-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி) விலக்கிக் கொள்ளப்படுகின்றன.

5. மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தல்கள் உடனடியாக அமலாக்கம் செய்யப்படவேண்டும்.

6. பெற்றுக் கொண்டைக்கு ஒப்புகை அளிக்கவும்.

இங்ஙனம்

(P. விஜய குமார்)
தலைமைப் பொதுமேலாளர்

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?