நடப்பிலிருந்த ரூ. 500 மற்றும் ரூ. 1000 வங்கி நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டன - ஆர்பிஐ - Reserve Bank of India
நடப்பிலிருந்த ரூ. 500 மற்றும் ரூ. 1000 வங்கி நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டன
RBI/2016-17/112 நவம்பர் 08, 2016 தலைவர் / மேலாண்மை இயக்குநர் / அன்புடையீர் நடப்பிலிருந்த ரூ. 500 மற்றும் ரூ. 1000 வங்கி நோட்டுகள் சட்டப்படி இந்திய அரசு, அரசிதழ் அரிவிக்கை எண் 2652 (நவம்பர் 08, 2016 தேதியிட்டதன்) மூலம் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட முன்னர் புழக்கத்திலிருந்த ரூ. 500 மற்றும் ரூ. 1000 மதிப்பிலக்க வங்கி நோட்டுகள் நவம்பர் 09, 2016 முதல் (அந்த அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ள வகையில்) சட்டப்படி செல்லுபடியாகாது என்று அறிவித்தது. நம் நாட்டின் கலாசார பாரம்பரியம் மற்றும் விஞ்ஞான சாதனைகளை உயர்த்திக் காட்டும் வகையில் புதிய வித்தியாசமான வடிவமைப்பு மற்றும் அளவில் மகாத்மா காந்தி புதிய வரிசை நோட்டுகள் வெளியிடப்பட உள்ளன.. செல்லுபடியாகாத இந்தக் குறிப்பிட்ட நோட்டுகளை டெபாசிட் செய்யவோ அல்லது செல்லும்படியாகும் இதர மதிப்பிலக்க நோட்டுகளாக மாற்றிக் கொள்ளவோ பொதுமக்கள் நாடும் முதன்மை முகமைகளாக வங்கிகள் விளங்கும். பொதுமக்கள் இத்தகைய பரிவர்த்தனைகளை டிசம்பர் 30, 2016 அன்றும் அதற்கு முன்பாகவும் மேற்கொள்ளலாம். ஆகவே, வங்கிகள் இந்தப் பணிக்கு மிக அதிகமான முக்கியத்துவத்தை அளிக்கவேண்டும். பொதுமக்கள் தங்கள் வசமுள்ள ரூ. 500 மற்றும் ரூய1000 நோட்டுகளை மாற்றிக்கொள்ள ஏதுவாக வங்கிகள் பின்வரும் ஏற்பாடுகளைச் செய்திடவேண்டும். 2. நவம்பர் 09, 2016 அன்று எடுக்கவேண்டிய நடவடிக்கைகள்
3. நவம்பர் 10, 2016 அன்று எடுக்கவேண்டிய நடவடிக்கை (a) வங்கிகள் சாதாரண வேலை நாட்களைப் போல், நவம்பர் 10, 2016 அன்று இயங்கத் தொடங்கும். (b) வங்கிகள் குறிப்பிட்ட நோட்டுகளை மாற்றுகின்ற வசதியை செய்து தரும் பணிக்கு மிக அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும். கூடுதலான முகப்புகள் அமைக்கப்பட்டு, பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடுதல் நேரமும் பணிபுரியத் தயாராக இருக்கவேண்டும். பெருமளவு வங்கிப் பணியாளர்கள் இந்த வேலைக்கு ஒதுக்கப்படவேண்டும். கூடுதல் வேலை பளுவைச் சமாளிக்க ஓய்வுபெற்ற பணியாளர்களைக்கூட தற்காலிகமாகப் பணியமர்த்திக்கொள்ளலாம். (c) நோட்டுகளை மாற்றும் வசதி வங்கிகள், அரசுக் கருவூலங்கள் தவிர [பாரா (1) உப-பாரா (1)ல் கூறப்பட்டுள்ளபடி] இந்தக் குறிப்பிட்ட நோட்டுகளை வைத்திருக்கும் ஒரு நபர் அவற்றை கீழே குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்திய ரிசர்வ் வங்கி, பொதுத்துறை வங்கி, தனியார், அயல்நாட்டு வங்கி, பிராந்திய கிராமப்புற வங்கி, நகரக் கூட்டுறவு வங்கி, மாநில கூட்டுறவு வங்கி ஆகியவற்றின் ஏதாவது ஒரு கிளையில் டிசம்பர் 30, 2016 (அன்றும்) வரையிலும் மாற்றிக்கொள்ளலாம்.
4. அறிக்கை அளிக்கும் முறைகள் வங்கிக் கிளை ஒவ்வொன்றும், நவம்பர் 10, 2016 முதல் டிசம்பர் 30, 2016 வரை (அல்லது இந்திய ரிசர்வ் வங்கியால் பின்னர் அறிவிக்கப்படும் தேதி வரை) ஒவ்வொரு நாளின் வேலை நேரமுடிவில் அது மாற்றித்தந்த குறிப்பிட்ட நோட்டுகளைப் (ரூ.500, ரூ.1000) பற்றிய அறிக்கையை ரிசர்வ் வங்கி வடிவமைக்கும் படிவத்தில், மின்னஞ்சல் அல்லது நகலனுப்பி மூலம் அந்தந்த வங்கியின் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு பின்னிணைப்பு 6-ல் உள்ளபடி அனுப்பிட வேண்டும். இந்தக் கட்டுப்பாட்டு அலுவலகங்கள் இவற்றை ஒருங்கிணைத்து பின்னிணைப்பு 6A-ல் உள்ளபடி, இந்திய ரிசர்வ் வங்கியின் பண மேலாண்மைத் துறை, மைய அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக தினமும் அனுப்பவேண்டும். 5. வங்கிகள் தத்தம் கிளைகளுக்கு இத்திட்டத்தின் அம்சங்கள், வழிகாட்டுதல்களை கவனித்து உன்னிப்பாக பின்பற்றுமாறு விரிவான அறிவுறுத்தல்களை அனுப்பிடவேண்டும். வங்கிக் கிளைகளிலுள்ள பணியாளர்கள் குறிப்பாக முகப்புகளில் பணியாற்றுவோர் இது குறித்து தெளிந்த அறிவு பெறுதல் அவசியம். இதுகுறித்த விவரங்களை நமது இணையதளமான www.rbi.org.in மற்றும் அரசு நிதி அமைச்சகத்தின் இணையதளத்தையும் அணுகி அறிந்து பயன்பெறலாம் பணியாளர்கள் பின்னிணைப்பு 4-ல் கொடுக்கப்பட்டுள்ள அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் – பதில்கள் பகுதியை நன்றாகப் படித்து லகுவாக செயல்பட தேர்ச்சி பெறவேண்டும். 6. பின்னிணைப்பு-2, 3 மற்று 4-ல் உள்ள தகவல்களின் பிரதிகள் எடுத்து பொதுமக்களுக்கு அவற்றை விநியோகிக்கவேண்டும். 7. வங்கி வர்த்தக ஏற்பாட்டாளர்கள் சுவிட்ச் செயல்பாட்டாளர்கள், CIT குழுமங்கள் ஆகியோருக்கு இத்திட்டத்திற்கு தொடர்புடைய வகையில் தகுந்த வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். 8. வங்கிகள் இத்திட்டத்தின் அலமாக்கத்தைத் தினசரி அடிப்படையில் ஒரு மையக் கண்காணிப்பு அமைப்பின் மூலம் கண்காணிக்கவேண்டும். அதன் தலைவராக விளங்கும் தொடர்பு அதிகாரி பொதுமேலாளர் நிலைக்கும் கீழே இல்லாத அதிகாரியாக இருக்கவேண்டும். அந்தத் தொடர்பு அதிகாரியின் முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள் உரிய இந்திய ரிசர்வ் வங்கி மண்டல அலுவலகத்திற்கு (அதன் ஒரு நகல் இந்திய ரிசர்வ் வங்கி மைய அலுவலகத்திற்கும்) மின்னஞ்சல் மூலமாக பின்வரும் வகையில் அனுப்பப்படவேண்டும். 9. இந்திய ரிசர்வ் வங்கி அதன் மைய அலுவலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. அதன் மூலம் இத்திட்டத்தின் செயல்பாடு, முன்னேற்றம் ஆகியவற்றை கண்காணிப்பதோடு, வங்கிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழிகாட்டுகிறது. இந்த கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி பின்வருமாறு. E.mail: 10. பெற்றுக்கொண்டமைக்கு ஒப்புதல் அனுப்புக. இங்ஙனம் (P. விஜயகுமார்) இணைப்பு – மேலே கூறியுள்ளபடி |