இந்திய ரிசர்வ் வங்கி, மகாத்மா காந்தி (புதிய) வரிசையில் 10 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துகிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
இந்திய ரிசர்வ் வங்கி, மகாத்மா காந்தி (புதிய) வரிசையில் 10 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துகிறது
ஜனவரி 05, 2018 இந்திய ரிசர்வ் வங்கி, மகாத்மா காந்தி (புதிய) வரிசையில் இந்திய ரிசர்வ் வங்கி, ஆளுநர் டாக்டர் உர்ஜீத் R. பட்டேல் அவர்களின் கையெழுத்துடன் கூடிய, மகாத்மா காந்தி (புதிய) வரிசையில் ரூ 10 மதிப்பிலக்க நோட்டுகளை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. நோட்டின் பின்புறம் நாட்டின் பாரம்பரியத்தைச் சித்தரிக்கும், கோனார்க்கில் உள்ள சூரியனார் கோவிலைக் கொண்டுள்ளது. நோட்டின் அடிப்படை வர்ணம் சாக்லேட் பிரவுன் ஆகும். இந்த நோட்டுகளின் மற்ற வடிவமைப்புகள், வடிவியல் முறைகள் ஆகியவை ஒட்டுமொத்த வண்ணத் திட்டத்துடன் நோட்டின் இருபுறமும் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இதற்கு முன் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அனைத்து ₹ 10 மதிப்பிலக்க வங்கி நோட்டுகளும் தொடர்ந்து சட்டப்படி செல்லத்தக்கவையே. மகாத்மா காந்தி (புதிய) வரிசையில் ரூ 10 மதிப்பிலக்க நோட்டுகள், அதன் வடிவம் மற்றும் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு இருக்கும். i. வடிவம் முன்புறம் பின்புறம் ii. முக்கிய அம்சங்கள் முன்புறம் 1. ரூபாய் 10 ன் மதிப்பிலக்கம் இரு புறமும் தெளிவாகக் காணுமாறு(see through register) பதிவு பின்புறம் 10. நோட்டின் இடது புறம் அச்சடிக்கப்பட்ட வருடம் வங்கி நோட்டின் பரிமாணம் 63 மிமீ x 123 மிமீ இருக்கும். (ஜோஸ் J. காட்டூர்) பத்திரிக்கை வெளியீடு –2017-2018/1848 |