இந்திய ரிசர்வ் வங்கி, தி சிட்டி கோ-ஆபரேடிவ் பேங்க் லிமிடெட், மும்பை, மஹாராஷ்டிராவிற்கு கட்டுப்பாட்டு உத்தரவுகளை வழங்கியது - ஆர்பிஐ - Reserve Bank of India
இந்திய ரிசர்வ் வங்கி, தி சிட்டி கோ-ஆபரேடிவ் பேங்க் லிமிடெட், மும்பை, மஹாராஷ்டிராவிற்கு கட்டுப்பாட்டு உத்தரவுகளை வழங்கியது
ஏப்ரல் 18, 2018 இந்திய ரிசர்வ் வங்கி, தி சிட்டி கோ-ஆபரேடிவ் பேங்க் லிமிடெட், மும்பை, மஹாராஷ்டிராவிற்கு கட்டுப்பாட்டு உத்தரவுகளை வழங்கியது தி சிட்டி கோ-ஆபரேடிவ் பேங்க் லிமிடெட், மும்பை, ஏப்ரல் 17, 2018 தேதேயிட்ட கட்டுப்பாட்டு உத்தரவு எண் DCBS.CO.BSD-I/D-5/12.22.039/2017-18-ன்படி இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் கீழ் உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வைப்புதாரர்கள், ஒவ்வொரு சேமிப்புக் கணக்கு / நடப்புக் கணக்கு / வேறு ஏதேனும் வைப்புக் கணக்கு, இவ்வாறு எந்தப் பெயரில் இருந்தாலும், மொத்த வைப்புத் தொகையிலிருந்து திரும்பப்பெறும் தொகை ரூ. 1,000/-க்கு (ரூபாய் ஆயிரம் மட்டும்) அதிகமாகாமல் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். ரிசர்வ் வங்கியிடமிருந்து எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் இல்லாமல், சிட்டி கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட் எந்த கடன்களையும் அட்வான்ஸ்களையும் வழங்கவோ அல்லது புதுப்பிக்கவோ, எந்தவொரு முதலீடும் செய்யவோ, நிதிகளின் கடன் மற்றும் புதிய வைப்புகளை ஏற்றுக்கொள்வது உட்பட எந்தவொரு கடனையும் வழங்கவோ, கொடுப்பனவு அல்லது எந்தவொரு தொகையையும் வழங்க ஒப்புக்கொள்ளவோ, அதன் பொறுப்புகள் மற்றும் கடமைகளை விடுவிப்பதில் அல்லது வேறு எந்த சமரசத்தையும் அல்லது ஏற்பாட்டையும், அதன் பண்புகளை எந்த இடமாற்றமோ அல்லது வேறு இடமாற்றமோ செய்வது கூடாது என ஏப்ரல் 17, 2018 தேதியிட்ட ரிசர்வ் வங்கியின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 18, 2018 அலுவல் நேர முடிவிலிருந்து இந்த வழிகாட்டுதல் உத்தரவு அமலாக்கம் செய்யப்படுகிறது. இவ்வாறு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவுகள் பிறப்பித்ததை மட்டுமே கருத்தில் கொண்டு, இந்த வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டதாகக் கருதக்கூடாது. இந்த வங்கியானது நிதிநிலை மேம்படும்வரை வங்கி வர்த்தகத்தைக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுத் தொடரலாம். சூழ்நிலைக்கேற்ப, இந்திய ரிசர்வ் வங்கி இந்த உத்தரவுகளில் மாற்றங்களைக் கொண்டுவரக் கருதலாம். வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவுச் சங்களுக்கும் பொருந்தும்)-ன் சட்டப்பிரிவு எண் 35 A (1) உடன் பிரிவு 56-ன் கீழ் அளிக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி, மேற்குறிப்பிட்ட உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் விருப்பத்திற்கிணங்க அவர்கள் பார்வையிடும் வண்ணம் மேற்குறிப்பிட்ட உத்தரவுகளின் பிரதி, வங்கியின் வளாகத்தில் அறிவிப்புப் பலகையில் வைக்கப்பட்டுள்ளது. (அஜித் பிரசாத்) பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/2761 |