RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

आरबीआई की घोषणाएं
आरबीआई की घोषणाएं

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78523559

புனே, மஹாராஷ்ட்ராவிலுள்ள சிவாஜிராவ் போசாலே சஹாகரி வங்கி லிமிடெட் நிறுவனத்துக்கு இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை வெளியிடுகிறது

மே 06, 2019

புனே, மஹாராஷ்ட்ராவிலுள்ள சிவாஜிராவ் போசாலே சஹாகரி வங்கி லிமிடெட்
நிறுவனத்துக்கு இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை வெளியிடுகிறது

இந்திய ரிசர்வ் வங்கி (மே 03, 2019 தேதியிட்ட உத்தரவின்படி), மகாராஷ்டிராவின் புனே, சிவாஜிராவ் போசாலே சஹாகரி வங்கி லிமிடெட்டை அனைத்தையும் உள்ளடக்கிய வழிகாட்டுதல்களின் கீழ் வைத்திருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வைப்புதாரர்கள், ஒவ்வொரு சேமிப்புக் கணக்கு / நடப்புக் கணக்கு / வேறு ஏதேனும் வைப்புக் கணக்கு, இவ்வாறு எந்தப் பெயரில் இருந்தாலும், மொத்த வைப்புத் தொகையிலிருந்து திரும்பப்பெறும் தொகை ரூ.1,000/- க்கு (ரூபாய் ஆயிரம் மட்டும்) மிகாமல் இருக்கும்படி மே 03, 2019 தேதியிட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவின் மூலம் அறிவுறுத்தப்படுகிறார்கள். மே 04, 2019 அன்று வர்த்தகம் முடிவுற்ற நாளிலிருந்து வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இவ்வாறு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவுகள் பிறப்பித்ததை மட்டுமே கருத்தில் கொண்டு, இந்த வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டதாகக் கருதக்கூடாது. இந்த வங்கியானது நிதிநிலை மேம்படும்வரை வங்கி வர்த்தகத்தைக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுத் தொடரலாம். சூழ்நிலைக்கேற்ப, இந்திய ரிசர்வ் வங்கி இந்த உத்தரவுகளில் மாற்றங்களைக் கொண்டுவரக் கருதலாம்.

வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவுச் சங்களுக்கும் பொருந்தும்) -ன் சட்டப்பிரிவு எண் 35 A (1) உடன் இணைந்தபிரிவு 56-ன் கீழ் அளிக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி, மேற்குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் விருப்பத்திற்கிணங்க அவர்கள் பார்வையிடும் வண்ணம் மேற்குறிப்பிட்ட உத்தரவுகளின் பிரதி, வங்கியின் வளாகத்தில் அறிவிப்புப் பலகையில் வைக்கப்பட்டுள்ளது.

ஷைலஜா சிங்
துணைப் பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2018-2019/2609

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?