இந்திய ரிசர்வ் வங்கி, யுனைடெட் இந்தியா கோ-ஆபரேடிவ் வங்கி, நாகினா, பிஜ்னார், உத்தரபிரதேசத்திற்கு வழிகாட்டி ஆணைகளைப் பிறப்பிக்கிறது – உத்தரவுகள் விலக்கிக்கொள்ளப்படுகின்றன - ஆர்பிஐ - Reserve Bank of India
இந்திய ரிசர்வ் வங்கி, யுனைடெட் இந்தியா கோ-ஆபரேடிவ் வங்கி, நாகினா, பிஜ்னார், உத்தரபிரதேசத்திற்கு வழிகாட்டி ஆணைகளைப் பிறப்பிக்கிறது – உத்தரவுகள் விலக்கிக்கொள்ளப்படுகின்றன
அக்டோபர் 14, 2016 இந்திய ரிசர்வ் வங்கி, யுனைடெட் இந்தியா கோ-ஆபரேடிவ் வங்கி, இந்திய ரிசர்வ் வங்கி, ஜூலை 08, 2015 தேதியிட்ட வழிகாட்டுதல் மூலமாக, வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப் பிரிவு எண் 35A மற்றும் சட்டப்பிரிவு 56 உடன் இணைந்தும் அவற்றின்கீழ் யுனைடெட் இந்தியா கோ-ஆபரேடிவ் வங்கி, நாகினா, பிஜ்னார், உத்தரபிரதேசத்திற்கு உத்தவுகளை பிறப்பித்தது. இவை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு, கடந்த மார்ச் 30, 2016 தேதியிட்ட கடைசி உத்தரவின்படி அவை அக்டோபர் 14, 2016 வரை செல்லுபடியாகும். இந்திய ரிசர்வ் வங்கி பொதுமக்கள் நலன்கருதியும், இது தேவை என்பதில் திருப்தியடைந்ததாலும், வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப்பிரிவு 35A (2) மற்றும் சட்டப்பிரிவு 56 உடன் இணைந்து வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் ப.யன்படுத்தி, மேற்படி வங்கிக்கு வழங்கிய உத்தரவுகளை (அவ்வப்போது புதுப்பிக்கப்பட்ட) இப்போது, அக்டோபர் 15, 2016 அன்று முதல் விலக்கிக்கொள்கிறது. விருப்பமுள்ள பொதுமக்கள் பார்வையிட வசதியான வகையில் இந்த உத்தரவின் நகல் வங்கிக் கட்டிடத்தில் அறிவிப்புப் பலகையில் வைக்கப்படவேண்டும். இந்த வங்கி, இனிமேற்பட்டு வழக்கமான வங்கியியல் வர்த்தகத்தில் தொடர்ந்து ஈடுபடலாம். (அனிருத்த D. ஜாதவ்) பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/929 |