சந்தை நேரங்களில் மாற்றங்களை ஆர்பிஐ அறிவிக்கிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
சந்தை நேரங்களில் மாற்றங்களை ஆர்பிஐ அறிவிக்கிறது
ஏப்ரல் 03, 2020 சந்தை நேரங்களில் மாற்றங்களை ஆர்பிஐ அறிவிக்கிறது தீவிர கோவிட்-19 தொற்றுநோய் பரவல் ஏற்படுத்தியுள்ள எதிர்பாராத சூழ்நிலையால் பொதுமுடக்கங்கள், சமூக விலகல், மக்கள் நடமாட்டம் மற்றும் அத்தியாவசியமற்ற நடவடிக்கைகளில் கட்டுப்பாடு, வீட்டிலிருந்தே வேலை மற்றும் வர்த்தக தொடர்ச்சி திட்டப்பணிகள் போன்ற ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவான இடப்பெயர்வுகள், நிதிச் சந்தைகளின் செயல்பாட்டை மோசமாக பாதித்துள்ளன. செயலாக்க மற்றும் தளவாட அபாயங்கள் ஏற்படுவதால், பணியாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. செயலாக்க நலிவு சந்தையில் பணப்புழக்கத்தை பாதிப்பதுடன் நிதி விலைகளின் நிலையற்றத் தன்மையையும் அதிகரிக்கும். இந்த அபாயங்களைக் குறைப்பதற்கும், சந்தை பங்கேற்பாளர்கள் போதுமான சரிபார்ப்புகள் மற்றும் மேற்பார்வைக் கட்டுப்பாடுகளைப் பராமரிப்பதுடன் நலிவடைந்த வளங்களை மேம்படுத்துவதற்காகவும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், பல்வேறு சந்தைகளுக்கான வர்த்தக நேரங்களை கீழுள்ளபடி திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது:
இந்த ஏற்பாடுகள் ஏப்ரல் 7, 2020 (செவ்வாய்) முதல் நடைமுறைக்கு வந்து ஏப்ரல் 17, 2020 (வெள்ளிக்கிழமை) வரை தொடரும் [இரண்டு நாட்களும் உள்ளடக்கியது]. ஆர்டிஜிஎஸ், நெஃப்ட், இ-குபேர் மற்றும் பிற சில்லறை கட்டண அமைப்புகள் உள்ளிட்ட வாடிக்கையாளர்களுக்கான அனைத்து வழக்கமான வங்கி சேவைகளும் தற்போதுள்ள நேரங்களின்படி தொடரும். யோகேஷ் தயால் பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/2175 |