இந்திய ரிசர்வ் வங்கி இரண்டாவது வங்கிக் குறை தீர்ப்பாளர் அலுவலகத்தை புதுதில்லியில் திறக்கிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
இந்திய ரிசர்வ் வங்கி இரண்டாவது வங்கிக் குறை தீர்ப்பாளர் அலுவலகத்தை புதுதில்லியில் திறக்கிறது
நவம்பர் 01, 2016 இந்திய ரிசர்வ் வங்கி இரண்டாவது வங்கிக் குறை தீர்ப்பாளர் வங்கிகள் முறைமையில் சமீபகாலத்தில் பெருகிவரும் இணைப்பினாலும், தற்சமயம் புதுதில்லியின் வங்கிக் குறைதீர்ப்பாளர் அலவலகத்தின் ஆட்சிப் பரப்பெல்லை பரந்து விரிந்த்தாக இருப்பதாலும், இந்திய ரிசர்வ் வங்கி புதுதில்லியில் இரண்டாம் அலவலகத்தை வங்கிக்குறைதீர்ப்பாயத்திற்கு திறந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியிலுள்ள முதல் வங்கிக்குறைதீர்ப்பாளர் அலுவலகம் தில்லி, ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளின் ஆட்சி எல்லைக்குரியதாக இருக்கும். இந்திய ரிசர்வ் வங்கியிலுள்ள இரண்டாம் குறைதீர்பாய அலுவலகம் ஹரியானா, (பன்ச்குலா, யமுனா நகர் மற்றும் அம்பாலா மாவட்டங்கள் தவிர) உத்தரபிரதேசத்தின் காசியாபாத், கௌதமபுத்த நகர் மாவட்டங்களின் ஆட்சி எல்லைக்குரியதாகும். (அஜித் பிரசாத்) பத்திரிக்கை வெளியீடு: 2016-2017/1079 |