இந்திய ரிசர்வ் வங்கி அய்ஸ்வாலில் உப அலுவலகத்தைத் திறந்துள்ளது
அக்டோபர் 15, 2015 இந்திய ரிசர்வ் வங்கி அய்ஸ்வாலில் உப அலுவலகத்தைத் திறந்துள்ளது புகைப்படம் இந்திய ரிசர்வ் வங்கி, மிசோரம் மாநிலத்தின் உடனடித் தேவைகளை கருத்தில் கொண்டு, அய்ஸ்வாலில் ஒரு உப அலுவலகத்தை இன்று திறந்துள்ளது. மிசோரம் மாநிலத்தின் முதல் அமைச்சர் திரு புலால் தான்ஹாவ்லா மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுனர் டாக்டர் ரகுராம் G. ராஜன் ஆகியோர் உப அலுவலகத்தைத் திறந்து வைத்தனர். இந்த உப அலுவலகம், கீழ்க் கண்டவற்றைக் கொண்டிருக்கும். நிதிச் சேர்க்கை மற்றும் மேம்பாட்டுத் துறை (FIDD) சந்தை தகவல் பிரிவு மற்றும் நுகவோர் கல்வி & பாதுகாப்புப் பிரிவு (புகார்களுக்காக). உப அலுவலகத்தின் தொடர்பு விவரங்கள்: துணைப் பொது மேலாளர் (பொறுப்பு அதிகாரி) தொடர்புக்கு திருமதி மேரி எல்.டெங், துணைப் பொதுமேலாளர் (பொறுப்பு அதிகாரி) (சங்கீதா தாஸ்) பத்திரக்கை வெளியீடு: 2015-2016/920 |
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: