தி ராமகிருஷ்ணா பரஸ்பர உதவி (Mutually Aided) கோ-ஆபரேடிவ் அர்பன் வங்கி லிமிடெட், நிததாவொலி, ஆந்திரப் பிரதேசம் மீது அபராதம் விதிக்கப்படுகிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
தி ராமகிருஷ்ணா பரஸ்பர உதவி (Mutually Aided) கோ-ஆபரேடிவ் அர்பன் வங்கி லிமிடெட், நிததாவொலி, ஆந்திரப் பிரதேசம் மீது அபராதம் விதிக்கப்படுகிறது
பிப்ரவரி 27, 2018 தி ராமகிருஷ்ணா பரஸ்பர உதவி (Mutually Aided) கோ-ஆபரேடிவ் அர்பன் தி ராமகிருஷ்ணா பரஸ்பர உதவி (Mutually Aided) கோ-ஆபரேடிவ் அர்பன் வங்கி லிமிடெட், நிததாவொலி, ஆந்திரப் பிரதேசம் மீது இந்திய ரிசர்வ் வங்கி ரூ. 1.00 லட்சம் (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்) பண அபராதத்தை, வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப்பிரிவு எண் 47 A (1) (c) மற்றும் 46(4) (i) உடன் இணைந்த கருத்தின்படி, இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இயக்குனர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு கடன்கள் மற்றும் முன் பணம் வழங்கியதில், இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவுகளை மீறிய காரணத்திற்காக விதித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் கோரும் அறிவிப்பை வழங்கியது. வங்கி பதிலை எழுத்து மூலமாக அளித்தது. இந்த விஷயத்தில் உண்மைகளைப் பரிசீலித்த பிறகும் மற்றும் இது தொடர்பாக வங்கி அளித்த தனிப்பட்ட பதிலை ஆராய்ந்த பின்னரும், மீறல்கள் தண்டனைக்குரியவையே என்று இந்திய ரிசர்வ் வங்கி முடிவெடுத்து அபராதத்தை விதித்துள்ளது. (அனிருத்தா D. ஜாதவ்) பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/2302 |