இந்திய ரிசர்வ் வங்கி அயல்நாடு வாழ்வோர் வைப்புத்திட்டங்களை அறிவார்ந்த வகையில் செம்மைப்படுத்தியுள்ளது - ஆர்பிஐ - Reserve Bank of India
இந்திய ரிசர்வ் வங்கி அயல்நாடு வாழ்வோர் வைப்புத்திட்டங்களை அறிவார்ந்த வகையில் செம்மைப்படுத்தியுள்ளது
பத்திரிக்கைக் குறிப்பு
|
இந்திய ரிசர்வ் வங்கி
|
பத்திரிக்கைத்தொடர்பு அலுவலகம்,
மத்திய அலுவலகம், தபால் பெட்டி எண் 406,
மும்பை – 400 001.
|
e-mail: helpprd@rbi.org.in
|
ஏப்ரல 17, 2004
இந்திய ரிசர்வ் வங்கி அயல்நாடு வாழ்வோர்
வைப்புத்திட்டங்களை அறிவார்ந்த வகையில்
செம்பைப்படுத்தியுள்ளது
அயல்நாடு வாழ்வோர் வைப்புத் திட்டங்களை இன்றளவில் மறுஆய்வு செய்ததின் விளைவாகக் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
(1)
அயல்வாழ்வோரின் ரூபாய் வைப்புநிதிகளுக்கான வட்டிமீது உச்சவரம்பு
ஒராண்டு முதல் மூன்றாண்டுக்குக் கால ஒப்பந்தத்திற்கு உட்பட்ட வெளிநாடுவாழ்வோர் (வெளியே) ரூபாய் வைப்புக் கணக்கு (வேவாரூ)(NRE) வைத்திருப்போருக்கு இந்தியாவில் ஏப்ரல் 17, 2004ல் முதிர்வடையும்போது கணக்கிலுள்ள யுஎஸ் டாலருக்கு வழங்கவேண்டிய வட்டிவீதம் LIBOR/SWAP வீதத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும். அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும்வரை இந்நிலை நீடிக்கும் என இப்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது.
3 ஆண்டு வைப்புக் கணக்குகளுக்கான வட்டிவீதம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அடிப்படையிலே 3 ஆண்டுகளுக்குக் கூடுதலான வைப்புக் கணக்குகளுக்கும் வட்டி முடிவு செய்யப்படும். தற்போதைய (வேவாரூ)(NRE) வைப்புக் கணக்குகள் முதிவுகாலம் முடிந்து புதுப்பிக்கப்பட்டாலும் இதே வட்டி வீதம் பொருந்தும்.
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வழங்கப்படும் வட்டி வீதத்தில் மாற்றமில்லா நிலை வேண்டும் எனும் நோக்கில், அமெரிக்க டாலர் (வேவாரூ)(NRE) வைப்புக் கணக்குகளும் LIBOR/SWAP வட்டி வீதத்தோடு இணைக்கப்பட்டு ஜூலை 17, 2003 முதல் அதே வட்டிவீதம் அறிவிக்கப்பட்டது. இந்த வைப்புகணக்குகளுக்கான வட்டிவீதங்கள் ஏப்ரல் 17, 2003ல் முதிர்வடைந்த வைப்புக்கணக்குகளின் தொகையின் அளவு LIBOR/SWAP வட்டிவீதத்தை விட 250 அடிப்படிப்புள்ளிகள் கூடுதலான நிலையிருந்து செப்டம்பர் 15, 2003ல் முதிர்வடைந்த வட்டிவீதம் LIBOR/SWAP வட்டிவீதத்கைவிட 100 அடிப்படைப்புள்ளிகளாகக் குறைந்து பிறகு அக்டோபர் 18, 2003ல் முதிர்வடைந்த வட்டிவீதம் LIBOR/SWAP வட்டிவீதத்தைவிட 25 அடிப்படைப் புள்ளிகளாகத் குறைந்தது.
(2) (வேவாரூ)(NRE) சேமிப்பு வைப்புக்கணக்கிற்கு வட்டி வீதம்
பலதரப்பட்ட (வேவாரூ)(NRE) வைப்புக் கணக்குகாளுக்கான வட்டி வீதங்களை ஒழுங்குபடுத்தும் நோக்கத்தோடு ஏப்ரல் 17, 2003ல் வங்கி வணிகம் முடிவடைந்த நிலையில் LIBOR/SWAP வைப்புக் கணக்குகாளுக்கான வட்டி வீதங்களுக்கு இணையாக (வேவாரூ)(NRE) வைப்புக் கணக்குகளின் வட்டிவீதத்தை இணைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. ஆறுமாத கால யு.எஸ். டாலர் வைப்புக் கணக்குகளுக்கான LIBOR/SWAP வட்டி வீதத்தை விட (வேவாரூ)(NRE) சேமிப்பு வைப்புகளுக்கான வட்டி வீதம் கூடுதலாக இருக்கக்கூடாது. முந்திய காலாண்டின் கடைசி வேளைநாளில் யு.எஸ். டாலர் வைப்புக் கணக்கிற்கான LIBOR/SWAP வட்டி வீதம் என்னவோ அதன் அடிப்படையில் (வேவாரூ)(NRE) சேமிப்பு வைப்புக் கணக்கிச்கான வட்டி வீதத்தைக் காலாண்டிற்கு முடிவு செய்யலாம். 2004, மார்ச் மாதம் கடைசி நாளன்று யு.எஸ். டாலர் LIBOR/SWAP வட்டிவீதம் என்னவாக இருந்ததோ அது ஏப்ரல்-ஜூன் 2004 காலாண்டிற்கான வட்டிவீதமாக அமையும்.
இப்போது (வேவாரூ)(NRE) சேமிப்பு வைப்புக் கணகுகளுக்கான வட்டி வீதம் உள்நாட்டு சேமிப்பு வைப்புக் கணக்குகளோடு இணைக்கப்படுகிறது. ஜூலை 17, 2003லிருந்து இக் கணக்குகளின் வட்டிவீதங்கள் யு.எஸ். டாலருக்கான LIBOR/SWAP வட்டிவீதங்களோடு இணைக்கப்படுகிறது.
(3) (வேவாரூ)(NRE) சேமிப்பு வைப்புகத்தொகையின் அடிப்படையில் கடன் வழங்கல்
கணக்குடையோர் சேமிப்பு வைப்புகத்தொகைகளை எந்நேரத்திலும் திருப்பிப் பெற்றுக் கொள்ளலாம் என்பதால் வங்கிகள் இவ் வைப்புக்கொகைகளுக்கு ஈடாக எந்த வகையான நேரடி அல்லது மறைமுக பற்றூன்றுரிமையையும் குறிப்பிடக்கூடாது என எடுத்துரைக்கப்பட்டது.
அல்பனா கிள்ளாவாலா
தலைமை பொது மேலாளர்
பத்திரிகை வெளியீடு 2003-2004/1235