தனியார் துறையில் பொதுவான வங்கிகள் உரிமம் (“on tap”) உடனுக்குடன் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களின் படி இந்திய ரிசர்வ் வங்கி விண்ணப்பதாரர்களின் பெயர்களை வெளியிடுகிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
தனியார் துறையில் பொதுவான வங்கிகள் உரிமம் (“on tap”) உடனுக்குடன் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களின் படி இந்திய ரிசர்வ் வங்கி விண்ணப்பதாரர்களின் பெயர்களை வெளியிடுகிறது
ஜுன் 30, 2017 தனியார் துறையில் பொதுவான வங்கிகள் உரிமம் (“on tap”) உடனுக்குடன் இந்திய ரிசர்வ் வங்கி, இன்று தனியார் துறையில் பொதுவான வங்கிகளின் உடனுக்குடன் உரிமத்திற்கான விண்ணப்பதாரர்களின் பெயர்களை வெளியிடுகிறது. நாளது தேதி வரை யு.ஏ.ஈ. (UAE) எக்ஸ்சேன்ச் மற்றும் பைனான்சியல் சர்வீஸ்ஸ் லிமிடெட்டிடமிருந்து விண்ணப்பத்தை இந்திய ரிசர்வ் வங்கி பெற்றுக்கொண்டுள்ளது. தனியார் துறையில் பொதுவான வங்கிகளுக்கு உடனடி உரிமம் வழங்குதல் தொடர்பாக ஆகஸ்டு 01, 2016 தேதியிட்ட வழிகாட்டுதல்களில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டதை நினைவூட்டுகிறோம். வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், இதற்கான விண்ணப்பதாரர்களின் பெயர்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் அவ்வப்போது அறிவிக்கப்படும். அதன்படி, இனி வரும் காலத்தில் காலாண்டு அடிப்படையில், விண்ணப்பதாரர்களின் பெயர்கள் வெளியிடப்படும். (அஜித் பிரசாத்) பத்திரிக்கை வெளியீடு - 2016-2017/3542 |