ஆர்பிஐ சந்தை நேரங்களை மதிப்பாய்வு செய்கிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
ஆர்பிஐ சந்தை நேரங்களை மதிப்பாய்வு செய்கிறது
ஏப்ரல் 16, 2020 ஆர்பிஐ சந்தை நேரங்களை மதிப்பாய்வு செய்கிறது கோவிட்-19 நோய்த்தோற்றுப் பரவலால் ஏற்பட்டுள்ள எதிர்பாராத சூழ்நிலை காரணமாக ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்காக, ஆர்பிஐயால் ஒழுங்குபடுத்தப்படும் வெவ்வேறு சந்தைகளுக்கான வர்த்தக நேரம் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை ஏப்ரல் 03, 2020 தேதியிட்ட பத்திரிக்கை வெளியீட்டின்படி ஏப்ரல் 07, 2020 (செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்ரல் 17, 2020 (வெள்ளிக்கிழமை) அன்று வர்த்தகம் முடியும் வரை மாற்றப்பட்டிருந்தது. பொது முடக்கம் மே 03, 2020 (ஞாயிற்றுக்கிழமை) வரை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்ற இந்திய அரசின் உத்தரவின் அடிப்படையில், ஆர்பிஐ -யால் ஒழுங்குபடுத்தப்படும் வெவ்வேறு சந்தைகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட வர்த்தக நேரம் ஏப்ரல் 30, 2020 (வியாழக்கிழமை) அன்று வர்த்தகம் முடிவடையும் வரை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. யோகேஷ் தயால் பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/2228 |