இந்திய ரிசர்வ் வங்கியின் DEA (டெபாசிட்தாரர்களின் கல்வி மற்றும் விழிப்புணர்வு) நிதிக்குழு விழிப்புணர்வு திட்டங்களுக்காக மேலும் 5 அமைப்புகளுக்கு அனுமதி - ஆர்பிஐ - Reserve Bank of India
இந்திய ரிசர்வ் வங்கியின் DEA (டெபாசிட்தாரர்களின் கல்வி மற்றும் விழிப்புணர்வு) நிதிக்குழு விழிப்புணர்வு திட்டங்களுக்காக மேலும் 5 அமைப்புகளுக்கு அனுமதி
டிசம்பர் 22, 2016 இந்திய ரிசர்வ் வங்கியின் DEA (டெபாசிட்தாரர்களின் கல்வி மற்றும் விழிப்புணர்வு) இந்திய ரிசர்வ் வங்கியின் DEA நிதிக்குழு தங்களிடம் பதிவு செய்துகொள்ள கூடுதலாக 5 அமைப்புகளுக்கு அனுமதி அளித்து பெயர்களை இன்று வெளியிடுகிறது. இவ்வாறு அனுமதிக்கப்பட்ட அமைப்புகளின் பெயர்கள் பின்வருமாறு:
இந்த நிதிக்குழுவிடமிருந்து குறிப்பிட்ட திட்டத்திற்கான நிதியுதவி பெறத் தேவையான தகவல்கள் மற்றும் ஆவணங்களுடன், இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்திலுள்ள குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் இந்த பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் விண்ணப்பங்களை அளிக்கும்படி இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுக்கொள்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியில் உள்ள ஒரு குழு, விண்ணப்பங்களை முதல்கட்டமாகப் பரிசீலனை செய்திடும். அதன் பின்னர், DEA நிதிக்குழு (இதில் 3 வெளி அங்கத்தினர்கள் அடங்குவர்) விண்ணப்பங்களை ஆய்வு செய்திடும். குறைந்தபட்ச தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்தல், அவர்களின் பணி குறித்த பதிவுகள், டெபாசிட்தாரர்களுக்கு அறிவூட்டுதல், வாடிக்கையாளர் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்புப் பிரிவுகளில் அவர்கள் ஆற்றியுள்ள பணி குறித்த சீராய்வு, தவிரவும், டெபாசிட்டர்கள் விழிப்புணர்வு திட்டங்களை நிறைவேற்ற அவர்களுக்குள்ள திறன், இவை அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்திய ரிசர்வ் வங்கி அக்டோபர், 01, 2015 அன்று DEA நிதிக்குழுவிலிருந்து நிதி உதவி அளித்திட விண்ணப்பித்திருந்தவர்களில் 20 அமைப்புகளைப் பதிவு செய்திட அனுமதி அளித்ததை நினைவு கூர்ந்திடலாம். அக்டோபர் 08, 2015 தேதியிட்ட பத்திரிக்கை வெளியீடு மூலம் இரண்டாவது முறையாகத் தகுதியுடைய விண்ணப்பங்களை பதிவிற்காக, இதன்பொருட்டு இந்திய ரிசர்வ் வங்கி வரவேற்றுள்ளது. (அஜித் பிரசாத்) பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/1618 |