பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி குறித்த இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை - ஆர்பிஐ - Reserve Bank of India
பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி குறித்த இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை
பிப்ரவரி 16, 2018 பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி குறித்த இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை செய்தி ஊடகங்களில் வெளிவந்துள்ள, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 1.77 பில்லியன் டாலர் தொகையை உள்ளடக்கிய மோசடியை அடுத்து, மற்ற வங்கிகளுக்கு உத்தரவாதமளிக்கும் கடிதத்தின் கீழ் அதன் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி, வழிகாட்டுதல்கள் மூலம் அறிவுறுத்தல்களை வழங்கியதாகக் கூறப்படுவதை இந்திய ரிசர்வ் வங்கி நிராகரிக்கிறது. பஞ்சாப் நோஷனல் வங்கியின் மோசடி, வங்கியின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களின் தவறான நடவடிக்கைகளால் உள்ளகக் கட்டுப்பாடுகள் தோல்வியடைந்த தால் ஏற்பட்ட ஆபத்தாகும். ஏற்கனவே, இந்திய ரிசர்வ் வங்கி, பஞ்சாப் நோஷனல் வங்கியின் கட்டுப்பாட்டு முறைமைகளை மேற்பார்வையிட்டும், அதற்குத் தகுந்த மேற்பார்வை நடவடிக்கையையும் எடுக்க உள்ளது. (ஜோஸ் J. காட்டூர்) பத்திரிக்கை வெளியீடு –2017-2018/2233 |