RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78492972

துருக்கியிலுள்ள வங்கி ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை நிறுவனத்துடன், “மேற்பார்வை ஒத்துழைப்பு மற்றும் மேற்பார்வைத் தகவல் பரிமாற்றம்” ஆகியவற்றிற்காக,இந்திய ரிசர்வ் வங்கி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது

டிசம்பர் 21, 2016

துருக்கியிலுள்ள வங்கி ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை நிறுவனத்துடன்,
“மேற்பார்வை ஒத்துழைப்பு மற்றும் மேற்பார்வைத் தகவல் பரிமாற்றம்” ஆகியவற்றிற்காக,இந்திய ரிசர்வ் வங்கி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது

இந்திய ரிசர்வ் வங்கி, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU), “மேற்பார்வை ஒத்துழைப்பு மற்றும் மேற்பார்வைத் தகவல் பரிமாற்ற”த்திற்காக துருக்கியிலுள்ள வங்கி ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை நிறுவனத்துடன் கையெழுத்திட்டுள்ளது.

வங்கி ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை நிறுவனத்தின் துணைத் தலைவர் திரு. மெஹ்மத் இர்ஃபான் குர்ட் அவர்களும், இந்திய ரிசர்வ் வங்கியின் சார்பாக, வங்கியின் நிர்வாக இயக்குநர் திருமதி மீனா ஹேம்சந்த்ரா அவர்களும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

மேற்பார்வைத் தகவலைப் பகிர்ந்திடவும், அதிக அளவில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், சில நாடுகளின் மேற்பார்வைத் துறையினரிடையே, ஒத்துழைப்பை அதிகரிக்கவும் மற்றும் மேற்பார்வை பற்றிய தகவல் பரிமாற்றத்திற்காகவும், இந்திய ரிசர்வ் வங்கி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் மேற்பார்வைத் துறையில் ஒத்துழைப்புக்கான கடிதம் ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ளது. இதனுடன் சேர்த்து, இந்திய ரிசர்வ் வங்கி இதுவரை 35 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஒரு மேற்பார்வை ஒத்துழைப்பிற்கான கடிதம் மற்றும் ஒரு ஒத்துழைப்பு அறிக்கை ஆகியவற்றைச் செய்துள்ளது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/1608

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?