“1965 இந்திய-பாகிஸ்தான் யுத்த நிகழ்வின் பொன்விழா” வைக் குறிக்கும் வகையில் புதிய ₹ 5 நாணயங்கள் வெளியீடு - ஆர்பிஐ - Reserve Bank of India
“1965 இந்திய-பாகிஸ்தான் யுத்த நிகழ்வின் பொன்விழா” வைக் குறிக்கும் வகையில் புதிய ₹ 5 நாணயங்கள் வெளியீடு
செப்டம்பர் 03, 2015 “1965 இந்திய-பாகிஸ்தான் யுத்த நிகழ்வின் பொன்விழா” வைக் இந்திய ரிசர்வ் வங்கி ”1965 இந்திய-பாகிஸ்தான் யுத்த நிகழ்வின் பொன்விழா” வைக் குறிக்கும் வகையில் புதிய ₹ 5 மதிப்பிலக்க நாணயங்களை விரைவில் புழக்கத்தில் விடுகிறது. நாணயத்தின் வடிவம்: முன்புறம்: நாணயத்தின் இப்பகுதியில் அசோகா தூணின் சிங்க முகமும் அதற்குக் கீழ் ‘सत्यमेव जयते’ என்ற வாசகம் இந்தியிலும் பொறிக்கப்பட்டிருக்கும். இதன் இடப்பக்கம் மேற்புறத்தில் ‘भारत’ என்று இந்தியிலும் வலப்பக்கம் ‘INDIA’ என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும். சிங்கமுகத்தின் கீழ் பகுதியில் “₹“ என்ற ரூபாய் குறியீடும் மதிப்பிலக்கம் “5” என்பது சர்வதேச எண் அளவிலும் பொறிக்கப்பட்டிருக்கும். பின்புறம்: நாணயத்தின் மறுபக்கம் இடது மற்றும் வலதுபுறம் ஆலிவ் இலையின் கிளையுடன் ”அமர் ஜவான்”-ன் நினைவுச்சின்னம் மத்தியில் பொறிக்கப்பட்டிருக்கும். இடது மேற்புறம் “वीरता एवं बलिदान” என்று தேவநாகரியிலும் மற்றும் வலது மேற்புறம் “VALOUR AND SACRIFICE” என்று ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும். நினைவுச் சின்னத்தின் கீழ் வருடம் “2015” எழுதப்பட்டிருக்கும். தேவநாகரியில் மேற்பக்கம் “1965 सामरिक अभियान का स्वर्ण जयंती वर्ष“ என்றும், கீழ்ப்பக்கம் “GOLDEN JUBILEE 1965 OPERATIONS“ என்று ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும். 2011ஆம் வருடத்திய இந்திய நாணயச் சட்டத்தின்படி, இந்த நாணயங்கள் செல்லத்தக்கவை. ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் இந்த மதிப்பிலக்க நாணயங்களும் செல்லத்தக்கவையே. அல்பனா கில்லவாலா PRESS RELEASE: 2015-2016/577 |