”சுவாமி சின்மயானந்தா பிறந்ததின நூற்றாண்டுவிழா”வைச் சிறப்பிக்கும் வகையில் ₹ 10 நாணயங்கள் வெளியீடு - ஆர்பிஐ - Reserve Bank of India
”சுவாமி சின்மயானந்தா பிறந்ததின நூற்றாண்டுவிழா”வைச் சிறப்பிக்கும் வகையில் ₹ 10 நாணயங்கள் வெளியீடு
ஜுன் 22, 2016 ”சுவாமி சின்மயானந்தா பிறந்ததின நூற்றாண்டுவிழா”வைச் இந்திய ரிசர்வ் வங்கி, ”சுவாமி சின்மயானந்தா பிறந்ததின நூற்றாண்டுவிழா”வைச் சிறப்பிக்கும் வகையில் இந்திய அரசாங்கத்தினால் வெளியிடப்படும் ₹ 10 மதிப்பிலக்க நாணயங்களை விரைவில் புழக்கத்தில் விடுகிறது. இந்த நாணயங்களின் வடிவமைப்பு பற்றிய விபரங்களடங்கிய அறிக்கையை ஏப்ரல் 30, 2015 தேதியிட்ட அரசிதழில் – அசாதாரண – பகுதி – பிரிவு - பிரிவு 1 – எண் 274, நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. முன்புறம்: நாணயத்தின் மத்தியில் அசோகா தூணின் சிங்க முகமும் அதற்குக் கீழ் ‘सत्यमेव जयते’ என்ற வாசகம் இந்தியிலும் பொறிக்கப்பட்டிருக்கும். இதன் இடப்பக்கம் ‘भारत’ என்று தேவநாகரியிலும், வலப்பக்கம் ‘INDIA’ என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும். சிங்கமுகத்தின் கீழ் பகுதியில் “₹“ என்ற ரூபாய் குறியீடும், மதிப்பிலக்கம் 10 என்பது சர்வதேச எண் அளவிலும் பொறிக்கப்பட்டிருக்கும். பின்புறம்: நாணயத்தின் மறுபக்கம் “சுவாமி சின்மயானந்தா“-வின் உருவப்படம் மத்தியில் பொறிக்கப் பட்டிருக்கும். உருவப்படத்தின் மேற்புறம் “स्वामि चिन्मयानंद की जन्मशती“ என்று தேவநாகரியிலும் மற்றும் “BIRTH CENTENARY OF SWAMI CHINMAYANANDA” என்று கீழ்ப்புறத்தில் ஆங்கிலத்திலும் முறையே எழுதப்பட்டிருக்கும். மேலும் சுவாமி சின்மயானந்தாவின் உருவப்படத்தின் கீழ் “2015“ என்று ஆண்டு சர்வதேச எண்களில் பொறிக்கப்பட்டிருக்கும். 2011-ஆம் வருடத்திய இந்திய நாணயச் சட்டத்தின்படி, இந்த நாணயங்கள் செல்லத்தக்கவை. ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் இந்த மதிப்பிலக்க நாணயங்களும் செல்லத்தக்கவையே. (அஜித் பிரசாத்) பத்திரிக்கை வெளியீடு – 2015-2016/2974 |