தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களில் ஏற்பட்ட தவறான பரிவர்த்தனைகளை சரி செய்தல் - காலவரையறை - ஆர்பிஐ - Reserve Bank of India
தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களில் ஏற்பட்ட தவறான பரிவர்த்தனைகளை சரி செய்தல் - காலவரையறை
RBI/2009-2010/100 ஜூலை 17, 2009 தலைவர்/ நிர்வாக இயக்குநர்/தலைமை நிர்வாக அதிகாரிகள் அன்புடையீர், தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களின் தவறுதல் காரணமான மேற்கண்ட தலைப்பில் DPSS.NO.1424 மற்றும் 711/02.10.02/2008-09 என்ற 11.2.2009 தேதியிட்ட மற்றும் 23.10.2008 தேதியிட்ட சுற்றறிக்கைகளைப் பார்க்கவும். தவறான ஏடிஎம் பரிவர்த்தனைகளால் பணம் கணக்கிலிருந்து கழிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்களிடமிருந்து புகாரைப் பெற்ற 12 நாட்களுக்குள் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அத்தொகை திருப்பித்தர வேண்டும் என்பதற்கான உத்தரவுகள் அதில் உள்ளன. இந்த உத்தரவை வங்கிகள் சரியான முறையில் கடைபிடிக்கவில்லை என்று ரிசர்வ் வங்கிக்கு அதிக எண்ணிக்கையில் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும், எங்களது கவனத்திற்கு வந்த ஒரு விஷயம் பல்வேறு வங்கிகள் மற்ற வங்கி வாடிக்கையாளர்களுக்கு பணம் எடுப்பதற்கு பல்வேறு கடைசி தேதிகளை நிர்ணயிக்கின்றன. இவ்விஷயங்கள் ரிசர்வ் வங்கியால் விரிவான முறையில் சீராய்வு செய்யப்பட்டுள்ளன. வங்கிகள் கீழ்க்கண்ட உத்தரவுகளைக் கடைப்பிடிக்கலாம்.
2. (2007 ன் சட்டம் 51) கொடுப்பு மற்றும் தீர்வு முறைமைகள் சட்டம் 2007ன் பிரிவு 8ன்கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறதுஇச்சுற்றறிக்கையின் ஷரத்துக்களை பின்பற்றாவிட்டால் கொடுப்பு மற்றும் தீர்வு முறைமைகள் சட்டம் 2007(2007 ன் சட்டம் 51) பரிந்துரைத்துள்ளபடி தண்டனைத் தொகை செலுத்த நேரிடும். 3. இச்சுற்றறிக்கையின் நகலை நிர்வாக மன்றத்தின் முன் வைக்க ஏற்பாடு செய்யவும். 4. பெற்றமைக்கு ஒப்புதல் அளிக்கவும தங்கள் உண்மையுள்ள (G. பத்மநாபன்) |