கூட்டுறவு வங்கிகள் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குப் புத்தகத்தில் / கணக்கு அறிக்கையில் பரிவர்த்தனை விவரங்கள் பதிவு செய்தல் - ஆர்பிஐ - Reserve Bank of India
கூட்டுறவு வங்கிகள் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குப் புத்தகத்தில் / கணக்கு அறிக்கையில் பரிவர்த்தனை விவரங்கள் பதிவு செய்தல்
அறிவிப்பு எண் 24 ஜூலை 13, 2017 தலைமை நிர்வாக அதிகாரி அன்புடையீர் கூட்டுறவு வங்கிகள் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குப் புத்தகத்தில் / கணக்கு அறிக்கையில் பரிவர்த்தனை விவரங்கள் பதிவு செய்தல் இந்திய ரிசர்வ் வங்கியின் அக்டோபர் 26, 2010 தேதியிட்ட சுற்றறிக்கை UBD. CO. BPD (PCB) No. 18/12.05.001/2010-2011-ஐயும், அக்டோபர் 22, 2014 தேதியிட்ட சுற்றறிக்கை RPCD.CO.RCB.BC.No.36/07.51.010/2014-15-யில் இணைப்பில் பாரா 4.6.3-ஐயும் பார்க்கவும். பண வைப்பாளர்களுக்குக் கணக்குப் புத்தகங்கள் / கணக்கின் அறிக்கையில் தவறான புரிந்துகொள்ள முடியாத பதிவுகளைத் தவிர்த்திடவேண்டும். மேலும் வாடிக்கையாளர்களுக்கு அசெளகரியங்கள் ஏற்படாமல் தவிர்க்கும் பொருட்டு கணக்கில் உள்ள பரிவர்த்தனைகள் குறித்த விவரங்கள் சுருக்கமாகத் தெளிவாக கணக்குப் புத்தகங்கள் / அறிக்கையில் கட்டாயமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதை, கூட்டுறவு வங்கிகள் உறுதிசெய்திட வேண்டும். 2. கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்குகளைச் சரிபார்க்க, பல வங்கிகளும் கணக்குப் புத்தகங்களில் மற்றும் / அல்லது அறிக்கையில் பரிவர்த்தனை விபரங்களை சரிவர அளிப்பதில்லை என்பது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சிறந்த வாடிக்கையாளர்கள் சேவை நலனுக்காக, வங்கிகள் குறைந்தபட்சம் தேவையான விபரங்களை அவர்களின் கணக்குப்பதிவுகளில் வழங்கவேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இணைப்பில் குறிப்பிட்டுள்ள பரிவர்த்தனைகளின் பட்டியல் மாதிரிக்காக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது அவற்றை முழுமையானதாகக் கருதக் கூடாது. 3. கூட்டுறவு வங்கிகள் 'வைப்புத்தொகை காப்பீடு' பற்றிய தகவல்களையும் அவ்வப்போது மாறும் காப்பீட்டு வரம்புத் தொகையையும் கணக்குப் புத்தகத்தின் முன்பக்கத்திலேயே தெரிவிக்கவேண்டும். இங்ஙனம் (நீரஜ் நிகம்) இணைப்பு – மேலே குறிப்பட்டபடி கணக்கு அறிக்கை / கணக்குப் புத்தகத்தில் பதிவு செய்யப்படவேண்டிய விபரங்கள்
|