சரக்குகள் மற்றும் சேவைகள் வரிகளின் (ஜி.எஸ்.டி.) கீழ் பதிவு செய்யப்பட்ட MSME கடனாளிகளுக்கான நிவாரணம் - ஆர்பிஐ - Reserve Bank of India
சரக்குகள் மற்றும் சேவைகள் வரிகளின் (ஜி.எஸ்.டி.) கீழ் பதிவு செய்யப்பட்ட MSME கடனாளிகளுக்கான நிவாரணம்
RBI/2017-18/129 பிப்ரவரி 07, 2018 இந்திய ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்பட்ட அனைத்து வங்கிகள் மற்றும் அன்புடையீர் சரக்குகள் மற்றும் சேவைகள் வரிகளின் (ஜி.எஸ்.டி.) கீழ் தற்போது இந்தியாவில் உள்ள வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதிநிறுவனங்கள் (NBFCs), கடன் கணக்கை முறையீட்டு நெறிமுறைகளின் படி முறையே 90 நாட்கள் மற்றும் 120 நாள் அடிப்படையில் செயல் இழந்த சொத்துக்களாக (NPA) வகைப்படுத்துகின்றது.‘ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்வதன் மூலம் வணிகத்தை முறைப்படுத்துவது இடைக்கால கட்டத்தில் சிறிய நிறுவனங்களின் பணப்புழக்கங்களை மோசமாக பாதித்துள்ளது, ‘இதன் விளைவாக வங்கிகள் மற்றும் என்.பி.எஃப்.சி.க்களுக்கு திருப்பிச் செலுத்தும் கடமைகளை நிறைவேற்றுவதில் சிரமங்கள் உள்ளன’ என்று கோரப்பட்டுள்ளது. ஒறு முறைசாரா வர்த்தக சூழலுக்கு மாற்றுவதில் இந்த நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், வங்கிகளும், NBFCs-களும் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு (MSMED) சட்டத்தின் கீழ், நுண், சிறிய மற்றும் நடுத்தர நிறுவன சட்டம் 2006-ன்படி, கடன் வாங்கியவர்களுக்கு, வங்கிகள் மற்றும் NBFC-களின் புத்தகங்களில் தொடர்ந்து ஒரு நிலையான / தரமான சொத்து என பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு வகைப்படுத்தப்படவேண்டும்.
இங்ஙனம் |