துயர்துடைப்பு (Relief) / சேமிப்புப் பத்திரங்கள் வைத்திருப்போருக்குதாமதமாக அசல்/வட்டி வழங்குவதற்கு இழப்பீடுவழங்கப்படும் - ஆர்பிஐ - Reserve Bank of India
துயர்துடைப்பு (Relief) / சேமிப்புப் பத்திரங்கள் வைத்திருப்போருக்குதாமதமாக அசல்/வட்டி வழங்குவதற்கு இழப்பீடுவழங்கப்படும்
மே 20, 2005
துயர்துடைப்பு/சேமிப்புப் பத்திரங்கள் வைத்திருப்போருக்கு அவர்கள் இந்தப் பத்திரங்களில் முதலீடு செய்ததற்கு, முதிர்வுக்கால மதிப்பீட்டுத் தொகை வழங்குதல், அவர்கள் கணக்கில் வட்டி வரவு வைத்தல் ஆகியன தாமதாகும்போது அதற்கு இழப்பீடு வழங்குதல் வேண்டுமென்று வணிக வங்கிகளை இன்று இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. அந்த இழப்பீட்டுத் தொகை தாமதமான நாட்களுக்கு இப்போது நடப்பிலுள்ள சேமிப்புக்கணக்கு வீதத்தில் வட்டி வழங்கப்படவேண்டும். தாமதம் தங்களின் மூலம் ஏற்பட்டால் தனது சொந்த அலுவலகமும் இத்தகைய இழப்பீட்டினை வழங்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
துயர்துடைப்பு / சேமிப்புப் பத்திரங்களில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மேலும் நல்ல சேவை வழங்குவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி இதர வங்கிகளுக்கும் தனது சொந்த அலுவலகங்களுக்கும் அனுப்பியுள்ள தகவலில் குறிப்பிடப் பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களின்படி, வங்கிகள் தொகைதிரளா பத்திரங்களின் வட்டிப் பற்றாணைச் சீட்டினை தவணை நாளுக்கு ஒரு மாதத்திற்குமுன்னரே அனுப்ப வேண்டும். தொகை திரள் பத்திரங்களின் முதிர்வு மதிப்புப் பற்றாணையும் முன்னரே அனுப்பப்பட வேண்டும். ஒருவேளை பத்திரம் வைத்திருப்போர் பத்திரமுதிர்வுக்குப்பின் Discharged Securities ஐக் கேட்டால், வங்கி பத்திரம் வைத்திருப்போருக்கு முதிர்வுத் தொகையை Discharged Securities ஐப் பெற்ற ஐந்து வேலை நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
அல்பனா கில்லாவாலா
பொது மேலாளர்.
பத்திரிக்கை வெளியீடு 2004-2005/1220