டிஜிட்டல் கொடுப்பனவுகளை வலிமையாக்குவதற்கான குழுவின் அறிக்கை - ஆர்பிஐ - Reserve Bank of India
78511900
வெளியிடப்பட்ட தேதி மே 17, 2019
டிஜிட்டல் கொடுப்பனவுகளை வலிமையாக்குவதற்கான குழுவின் அறிக்கை
மே 17, 2019 டிஜிட்டல் கொடுப்பனவுகளை வலிமையாக்குவதற்கான குழுவின் அறிக்கை ஜனவரி 2019 மாதம் (UIDAI) யுஐடிஏஐயின் முன்னாள் தலைவர் ஸ்ரீ நந்தன் நிலேகனியின் தலைமையில் டிஜிட்டல் கொடுப்பனவுகளை வலிமையாக்குவதற்கான உயர் மட்டக் குழுவை இந்திய ரிசர்வ் வங்கி அமைத்தது. இந்த குழு பல்வேறு பங்குதாரர்களுடன் கலந்தாலோசிப்பது உட்பட தனது கலந்துரையாடல்களை நடத்தியது, இன்று தனது அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி குழுவின் பரிந்துரைகளை ஆராய்ந்து, மே 15, 2019 அன்று வெளியிடப்பட்ட அதன் கட்டண முறைமை விஷன் 2021 ஐ செயல்படுத்தும்போது தேவையான இடங்களில், நடவடிக்கை திட்டங்களை விவரிக்கும். யோகேஷ் தயால் செய்தி வெளியீடு: 2018-2019/2710 |
प्ले हो रहा है
கேட்கவும்
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?