இந்திய ரிசர்வ் வங்கி, ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் மீது பண அபராதம் விதிக்கிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
இந்திய ரிசர்வ் வங்கி, ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் மீது பண அபராதம் விதிக்கிறது
மார்ச் 09, 2018 இந்திய ரிசர்வ் வங்கி, ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட, உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்துகொள்ளுங்கள் (KYC) மற்றும் பணம் செலுத்தும் வங்கிகளுக்கான விதிமுறைகளை மீறியதற்காக ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட்டுக்கு மார்ச் 07, 2018 அன்று ரூ. 50 மில்லியன் பண அபராதத்தை விதிக்கிறது. வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் சட்டப் பிரிவு எண் 47A (1) (c) (உடன் இணைந்த பிரிவு 46 (4) (i) சேர்த்துப் படிக்கவும்)-ன்படி இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி, ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் / விதிமுறைகள் மீறப்பட்டதைக் கணக்கில் கொண்டு இந்த அபராதமானது விதிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை, கட்டுப்பாட்டு விதிகளைக் கடைபிடிப்பதிலுள்ள குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டதே தவிர எந்தவொரு பரிவர்த்தனையின் செல்லுபடியை, அல்லது வங்கி அதன் வாடிக்கையாளர்களுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தை பாதிக்கும் நோக்கத்தோடு அல்ல. பின்புலம் வாடிக்கையாளர்களின் தெளிவான / குறிப்பிட்ட ஒப்புதல் இல்லாமல் வங்கி வாடிக்கையாளர் கணக்குகளைத் திறந்துவிட்டதாக கூறிக்கொண்ட புகார்களையும் மற்றும் மோசமான ஊடக அறிக்கையின் அடிப்படையிலும், ரிசர்வ் வங்கியால் நவம்பர் 20 மற்றும் 22, 2017 வரை வங்கி, மேற்பார்வையிடப்பட்டது. மேற்பார்வை அறிக்கையில், வங்கி உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்துகொள்ளுங்கள் (KYC) மற்றும் பணம் செலுத்தும் வங்கிகளுக்கான விதிமுறைகளை மீறியது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக பெறப்பட்ட தொடர்புடைய ஆவணங்களை மீளாய்வு மற்றும் பரிசோதனை செய்ததன் அடிப்படையில், ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட உரிமத்திற்கான நிபந்தனைகளை மீறியதற்காக ஏன் தண்டனையை விதிக்கக்கூடாது என்பதற்கான காரணத்தை தெரிவிக்க வங்கிக்கு ஒரு காரண அறிவிப்பு, ஜனவரி 15, 2018 அன்று வழங்கப்பட்டது. விசாரணையின் முழு உண்மைகளையும், நிறுவனத்தின் பதில்களையும் பரிசீலித்தபின், தனிப்பட்ட விசாரணையின்போது சமர்ப்பிக்கப்பட்ட படிவங்கள், இவற்றைக் கொண்டு, உரிமத்தின் நிபந்தனைகளின் விதிமீறல் நிருபணமானது என்ற முடிவுக்கு வந்தது. இதனால், நிறுவனத்தின் மீதான அபராதத் தொகையை வசூலிப்பதற்கு உத்தரவாதம் செய்துள்ளது. (ஜோஸ் J. காட்டூர்) பத்திரிக்கை வெளியீடு –2017-2018/2410 |