பந்தன் பாங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
பந்தன் பாங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது
அக்டோபர் 29, 2019 பந்தன் பாங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), அக்டோபர் 29, 2019 தேதியிட்ட உத்தரவின்படி, பந்தன் வங்கி லிமிடெட் (வங்கி) க்கு, 1949 ஆம்ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (தி ஆக்ட்) பிரிவு 22 ன் கீழ் வங்கிகளுக்கு உரிமம் வழங்கும் நேரத்தில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டுதல்கள் மற்றும் பிப்ரவரி 22, 2013 தேதியிட்ட ‘தனியார் துறையில் புதிய வங்கிகளுக்கு உரிமம் வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள்’ (உரிமம் வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள்) இன் கீழ் ஆர்பிஐ விதித்துள்ள பிரமோட்டர் பங்கு வைத்திருத்தல் குறித்த வழிகாட்டுதல்கள் ஆகியவற்றைப் பின்பற்றாததற்காக ரூபாய் ஒரு கோடி அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதம், 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் இன் பிரிவு 46 (4)(i) உடன் இணைந்த பிரிவு 47 A (1) (c) இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி மேற்கூறிய உரிம வழிகாட்டுதல்கள் மற்றும் நிபந்தனைகளை வங்கி கடைபிடிக்காததற்காக விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தின் வழிகாட்டுதல் உத்தரவுகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் வங்கி தனது வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்டுள்ள எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கத்தில் அல்ல. பின்னணி: உரிம நிபந்தனைகளுடன் இணைந்த மேற்கண்ட உரிம வழிகாட்டுதல்களின் அடிப்படையில் நிறுவனம் வைத்திருக்கும் பங்குகளின் மொத்த ஈக்விட்டி மூலதனத்தில் 40% க்கும் அதிகமாக இருந்தால் நிறுவனம் வங்கியின் வர்த்தகம் தொடங்கிய நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் 40% பங்குகளாக குறைக்க வேண்டும். வங்கி அந்த வழிகாட்டுதல்களை பின்பற்றாததால் ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என்பதற்கான காரணத்தைக் காட்டுமாறு வங்கிக்கு ஒரு அறிவிப்பு வழங்கப்பட்டது. வங்கியிடமிருந்து பெறப்பட்ட பதில், தனிப்பட்ட விசாரணையின் போது செய்யப்பட்ட சமர்ப்பிப்புகள் மற்றும் ஆவணங்களை ஆராய்ந்த பின்னர் விதித்த உரிமம் வழங்குவதற்கான நிபந்தனைகளுடன் இணைந்த உரிமம் வழங்குவதற்கான உத்தரவுகளை பின்பற்றவில்லை என்ற மேற்கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன மற்றும் பண அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு ஆர்பிஐ வந்தது. யோகேஷ் தயால் பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/1051 |