RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78521978

கார்ப்பரேஷன் வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது

ஆகஸ்ட் 02, 2019

கார்ப்பரேஷன் வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), ஜூலை 31, 2019 தேதியிட்ட உத்தரவின் மூலம், (i) வங்கிகளில் சைபர் பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் (ii) வணிக வங்கிகள் மற்றும் தேர்ந்தெடுத்த FI களின் மோசடி வகைப்பாடு மற்றும் அறிக்கையிடல் தொடர்பாக ஆர்பிஐ வெளியிட்டுள்ள உத்தரவுகளுக்கு இணங்காததற்காக, கார்ப்பரேஷன் வங்கிக்கு (தி பாங்க்) ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (சட்டம்) பிரிவு 46 (4) (i) மற்றும் 51 (1) பிரிவுகளுடன் இணைந்த பிரிவு 47 A(1) (c) விதிகளின் கீழ் ஆர்பிஐ யில் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் வங்கி அதன் வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கத்தில் இல்லை.

பின்னணி

ரத்து செய்யபட்ட டெபிட் கார்டைப் பயன்படுத்தி மோசடி வகைப்பாடுகளை குறித்து வங்கி சமர்பித்த அறிக்கையை ஆராய்ந்ததில் வங்கிகளில் இணைய பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் வணிக வங்கிகளால் மற்றும் தேர்ந்தெக்கப்பட்ட FIs களின் மோசடி வகைப்பாடு மற்றும் அறிக்கையிடல் தொடர்பாக ஆர்பிஐ வழங்கிய உத்தரவுகளை கடைப்பிடிக்க தவறியது தெரியவந்தது. வழிகாட்டு உத்தரவுகளை கடைப்பிடிக்கத் தவறியதற்காக ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என்ற காரணத்தை வழங்குமாறு அறிவுறுத்தி வங்கிக்கு காரண விளக்க அறிவிப்பு அனுப்பட்டது. வங்கியின் பதில் மற்றும் தனிப்பட்ட விசாரணையின் போது பெறப்பட்ட வாய்வழி சமர்ப்பிப்புகளை பரிசீலித்தபின் ரிசர்வ் வங்கி உத்தரவுகளை பின்பற்றவில்லை என்ற மேற்கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன மற்றும் பண அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு ஆர்பிஐ வந்தது.

யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/331

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?