இந்திய ரிசர்வ் வங்கி, சவுத் இந்தியன் வங்கி லிமிடெட் மீது அபராதம் விதிக்கிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
இந்திய ரிசர்வ் வங்கி, சவுத் இந்தியன் வங்கி லிமிடெட் மீது அபராதம் விதிக்கிறது
மே 18, 2018 இந்திய ரிசர்வ் வங்கி, சவுத் இந்தியன் வங்கி லிமிடெட் சவுத் இந்தியன் வங்கி லிமிடெட் (வங்கி), மீது இந்திய ரிசர்வ் வங்கி ரூ. 50 மில்லியன் பண அபராதத்தை விதிக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட மே 14, 2018 தேதியிட்ட உத்தரவின்படி, வருவாய் அங்கீகாரம் மற்றும் சொத்துகளை வகைப்படுத்தும் விதிமுறைகள், “உங்கள் வாடிக்கையாளரை அறிதல்” விதிமுறைகள், கருவூல செயல்பாடுகள் மற்றும் அதன் செயல்பாடுகளில் இணக்கம், கலாச்சாரத்தில் உள்ள செயல் குறைபாடுகள் ஆகியவற்றிற்கு இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு எதிராக, மேற்படி வங்கி செயல்பட்டதால், வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப்பிரிவு எண் 47 A (1) (c) மற்றும் 46(4) (i) உடன் இணைந்த கருத்தின்படி, இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்த அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தில் குறைபாடுகளை அடிப்படையாக கொண்டது. மற்றும் அதன் வாடிக்கையாளர்களுடன் வங்கியால் நிகழ்த்தப்பட்ட பரிவர்த்தனை அல்லது வாடிக்கையாளர்களுடனான ஒப்பந்தத்தின் செல்லுபடியையும் குறிப்பிட்டதல்ல. (ஜோஸ் J. காட்டூர்) பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/3038 |