இந்திய ரிசர்வ் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் மீது பண அபராதம் விதிக்கிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
இந்திய ரிசர்வ் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் மீது பண அபராதம் விதிக்கிறது
மார்ச் 07, 2018 இந்திய ரிசர்வ் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட, கள்ள நோட்டுகளைக் கண்டறிய மற்றும் பறிமுதல் செய்யப்படவேண்டிய நோட்டுகள் பற்றிய வழிகாட்டுதல்களை மீறியதற்காக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் மீது, மார்ச் 01, 2018 அன்று ரூ. 4 மில்லியன் பண அபராதத்தை விதித்துள்ளது. இந்தப் பண அபராதமானது, வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் சட்டப் பிரிவு எண் 47A (1) (c) (உடன் இணைந்த பிரிவு 46 (4) (i) ன்படி, வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்களை மீறியதற்காக விதிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை, கட்டுப்பாட்டு விதிகளைக் கடைபிடிப்பதிலுள்ள குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டதே தவிர எந்தவொரு பரிவர்த்தனையின் செல்லுபடியை, அல்லது வங்கி அதன் வாடிக்கையாளர்களுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தை பாதிக்கும் நோக்கத்தோடு அல்ல. பின்புலம் வங்கியின் இரண்டு கிளைகளில் பணப்பெட்டக பரிசோதனை செய்ததில், கள்ள நோட்டுகளைக் கண்டறிய மற்றும் பறிமுதல் செய்யப்படவேண்டிய நோட்டுகள் பற்றிய வழிகாட்டுதல்கள் மீறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெறப்பட்ட தொடர்புடைய ஆவணங்களை மீளாய்வு மற்றும் பரிசோதனையின் அடிப்படையில், ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்காததற்காக ஏன் தண்டனையை விதிக்கக்கூடாது என்பதற்கான காரணத்தை தெரிவிக்க வங்கிக்கு ஒரு காரண அறிவிப்பு ஜனவரி 05, 2018 அன்று வழங்கப்பட்டது. விசாரணையின் முழு உண்மைகளையும், தனிப்பட்ட விசாரணையின்போது சமர்ப்பிக்கப்பட்ட படிவங்கள், நிறுவனத்தின் பதில்களையும் பரிசீலித்தபின், ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள்/ வழிகாட்டுதல்களை மீறியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் மேற்கூறிய விதிமீறல் குறித்த குற்றச்சாட்டு நிரூபணமானது என்று முடிவு செய்து அபராதம் விதிப்பதற்கான தேவையை RBI உறுதி செய்துள்ளது (ஜோஸ் J. காட்டூர்) பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/2385 |