இந்திய ரிசர்வ் வங்கி, சிண்டிக்கேட் வங்கியின் மீது பண அபராதம் விதிக்கிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
இந்திய ரிசர்வ் வங்கி, சிண்டிக்கேட் வங்கியின் மீது பண அபராதம் விதிக்கிறது
டிசம்பர் 15, 2017 இந்திய ரிசர்வ் வங்கி, சிண்டிக்கேட் வங்கியின் இந்திய ரிசர்வ் வங்கி, சிண்டிக்கேட் வங்கியின் மீது, டிசம்பர் 12, 2017 அன்று, காசோலைகளைப் பெறுதல் / தள்ளுபடி, பில் தள்ளுபடி மற்றும் வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளுதல் (KYC) / கருப்புப் பண சலவைத்தடுப்பு விதிமுறைகளைக் கையாளுவது போன்றவற்றில், வங்கியின் வழிகாட்டுதல்கள் / அறிவுறுத்தல்கள்-ஐ பின்பற்றாத காரணத்தினால் ரூ. 50 மில்லியன் பண அபராதத்தை விதிக்கிறது. வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் சட்டப் பிரிவு எண் 47A (1) (c) (உடன் இணைந்த பிரிவு 46 (4) (i))-ன்படி, வங்கியால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல் உத்தரவுகளுக்கு எதிராகச் செயல்பட்டதால், இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தப் பண அபராதத்தை விதிக்கிறது. இந்த நடவடிக்கை, கட்டுப்பாட்டு விதிகளைக் கடைபிடிப்பதிலுள்ள குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டதே தவிர எந்தவொரு பரிவர்த்தனையின் செல்லுபடியை, அல்லது வங்கி அதன் வாடிக்கையாளர்களுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தை பாதிக்கும் நோக்கத்தோடு அல்ல.பின்புலம் வங்கியின் சில கிளைகளில் நடந்த மோசடிக்குப் பின்னர், வங்கியின் இந்த கிளைகளில் இந்திய ரிசர்வ் வங்கியால் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக பெறப்பட்ட தொடர்புடைய ஆவணங்களை மீளாய்வு மற்றும் பரிசோதனையின் கண்டுபிடிப்பின் அடிப்படையில், ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள்/ வழிகாட்டுதல்களுக்கு இணங்காததற்காக ஏன் தண்டனையை விதிக்கக்கூடாது என்பதற்கான காரணத்தை தெரிவிக்க வங்கிக்கு ஒரு காரண அறிவிப்பு வழங்கப்பட்டது. விசாரணையின் முழு உண்மைகளையும், நிறுவனத்தின் பதில்களையும் பரிசீலித்தபின், ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள்/வழிகாட்டுதல்கள் பின்பற்றாத காரணத்தினால் மேற்கூறிய விதிமீறல் குறித்த குற்றச்சாட்டு நிரூபணமானது என்று முடிவு செய்து அபராதம் விதிப்பதற்கான தேவையை RBI உறுதி செய்துள்ளது. (அஜித் பிரசாத்) |