RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78519039

ஜல்கான் பீப்பில்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், ஜல்கான் (மகாராஷ்டிரா) மீது இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது

அக்டோபர் 29, 2019

ஜல்கான் பீப்பில்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், ஜல்கான் (மகாராஷ்டிரா) மீது
இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), அக்டோபர் 24, 2019 தேதியிட்ட உத்தரவின் பேரில், ஜல்கான் பீப்பில்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், ஜல்கான், மகாராஷ்டிரா (தி பாங்க்) க்கு வருமான அங்கீகாரம் மற்றும் சொத்து வகைப்பாடு (ஐஆர்ஏசி) விதிமுறைகள் மற்றும் முன்பணங்களை நிர்வகித்தல் குறித்து ஆர்பிஐயின் வழிகாட்டுதல்களை பின்பற்றாததற்காக ரூ. 25 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதம், 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 47 A (1) (c) உடன் இணைந்த பிரிவுகள் 46(4)(i) மற்றும் 56 விதிகளின் கீழ் ஆர்பிஐ தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றாததற்காக விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் வங்கி அதன் வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கமாக இல்லை.

பின்னணி

ஆர்பிஐயால் மார்ச் 31, 2018 நிலவரப்படி நடத்தப்பட்ட வங்கியின் வங்கியின் நிதிநிலை தொடர்பான சட்டபூர்வமான ஆய்வில், ஐ.ஆர்.ஏ.சி விதிமுறைகள் மற்றும் முன்பணங்களை நிர்வகித்தல் குறித்த ஆர்பிஐ யின் அறிவுறுத்தல்களுக்கு இணங்காதது தெரியவந்தது. மேற்கூறிய வழிகாட்டுதல்களை பின்பற்றாததற்காக ஏன் பண அபராதம் விதிக்கக்கூடாது என்பதற்கான காரணத்தைக் காட்ட வங்கிக்கு ஓர் அறிவிப்பு வழங்கப்பட்டது. வங்கியின் பதில் மற்றும் தனிப்பட்ட விசாரணையின் போது செய்யப்பட்ட வாய்வழி சமர்ப்பிப்புகளைப் பரிசீலித்தபின், மேற்கண்ட குற்றச்சாட்டுகளுக்காக பண அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்குஆர்பிஐ வந்தது.

யோகேஷ் தயால்     
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/1050

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?