மெஹமதாபாத் அர்பன் பீபிள்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மெஹமதாபாத் மீது இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
மெஹமதாபாத் அர்பன் பீபிள்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மெஹமதாபாத் மீது இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது
செப்டம்பர் 13, 2019 மெஹமதாபாத் அர்பன் பீபிள்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மெஹமதாபாத் மீது இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), செப்டம்பர் 11, 2019 தேதியிட்ட உத்தரவின் படி, மெஹமதாபாத் அர்பன் பீபிள்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மெஹமதாபாத் (தி பாங்க்) -க்கு இயக்குநர்களுக்கு கடன்கள் மற்றும் முன் பணம் வழங்குவது மற்றும் கே.ஒய்.சி விதிமுறைகள் / ஏ.எம்.எல் தரங்கள் குறித்து ஆர்பிஐ வழங்கிய வழிகாட்டுதல்களை பின்பற்றாததற்காக ரூ 2 லட்சம் அபராதம் விதித்துள்ளது. ஆர்பிஐ வழங்கிய மேற்கண்ட விதிமுறைகளை கடைபிடிக்காததற்காக 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 47A (1)(c) உடன் இணைந்த பிரிவு 46 (4) (i) மற்றும் பிரிவு 56 இன் கீழ் தனக்கு வழங்கிய அதிகாரங்களை பயன்படுத்தி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் வங்கி அதன் வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கமாக இல்லை. பின்னணி ஆர்பிஐ க்கு கிடைத்த புகார்களின் அடிப்படையில், ஆர்பிஐ யால் நடத்தப்பட்ட வங்கியின் புத்தகங்கள் மற்றும் கணக்குகளின் ஆய்வின்படி, இயக்குநர்களுக்கு கடன்கள் மற்றும் முன்பணங்களை அனுமதிப்பது மற்றும் கே.ஒய்.சி விதிமுறைகள் / ஏ.எம்.எல் தரநிலைகளுக்கான வழிமுறைகளை வங்கி பின்பற்றவில்லை என்பது தெரியவந்தது. ஆர்பிஐ வழங்கிய மேற்கூறிய உத்தரவுகளை கடைபிடிக்காததற்காக வங்கிக்கு ஏன் அபராதம் விதிக்ககூடாது என்ற காரணத்தை வழங்குமாறு வங்கிக்கு அறிவிப்பு அனுப்பட்டது. வங்கியிடமிருந்து பெறப்பட்ட பதில், தனிப்பட்ட விசாரணையின் போது செய்யப்பட்ட வாய்வழி சமர்ப்பிப்புகள் மற்றும் தனிப்பட்ட விசாரணைக்குப் பிறகு வங்கி செய்த கூடுதல் சமர்ப்பிப்புகள் ஆகியவற்றை ஆராய்ந்த பின்னர், ஆர்பிஐ யின் உத்தரவுகளை பின்பற்றவில்லை என்ற மேற்கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது மற்றும் பண அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு ஆர்பிஐ வந்தது. யோகேஷ் தயால் பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/699 |