இந்திய ரிசர்வ் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா மீது அபராதம் விதிக்கிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
இந்திய ரிசர்வ் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா மீது அபராதம் விதிக்கிறது
ஜூலை 31, 2017 இந்திய ரிசர்வ் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா யூனியன் பாங்க் ஆப் இந்தியா, “உங்கள் வாடிக்கையாளர்களை அறிதல்” குறித்து (KYC) இந்திய ரிசர்வ் வங்கி அளித்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத காரணத்தால், அவ்வங்கி மீது இந்திய ரிசர்வ் வங்கி ரூ. 20..00 மில்லியன் பண அபராதத்தை ஜூலை 26,2017 அன்று விதித்துள்ளது. வங்கிகள் நெறிமுறைச் சட்டம் 1949-ன் (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப்பிரிவு எண் 47 A (1) (c) மற்றும் 46(4) (i) உடன் இணைந்த கருத்தின்படி, இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட சில வழிகாட்டுதல்களை மேற்படி வங்கி பின்பற்றாத காரணத்தால், அபராதம் விதிக்கப்படுகிறது. நெறிக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதில் உள்ள குறைபாடுகளால் மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வங்கி வாடிக்கையாளர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தம்,பரிவர்த்தனை ஆகியவற்றின் மதிப்பைக் குறித்து ஏதும் குறிப்பிடுவது இதன் நோக்கமன்று. பின்புலம் ஊடகங்களின் வாயிலாக வங்கியில் மோசடி நிகழ்ந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் பெருமளவில் பரிவர்த்தனைகள் நடந்துள்ள சில கணக்குகளில் சோதனை நடத்தப்பட்டது.. இது தொடர்பாக பெறப்பட்ட ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டன. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட சில வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததற்காக அதன் மீது ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என்று ரிசர்வ் வங்கி இது குறித்து விளக்கம் கோரி அறிவிப்பினை அவ்வங்கிக்கு அனுப்பியது. இது குறித்த வங்கியின் பதிலையும் நேரில் வங்கி அளித்த விளக்கங்களையும் கூடுதலாக அளிக்கப்பட்ட தகவல் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டதில், வங்கி வழிகாட்டுதல்களைப் பின்பற்றாதது நிரூபிக்கப்பட்டு, அதற்கு பண அபராதம் விதிப்பது அவசியமென இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. (அஜித் பிரசாத்) பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/294 |