இந்திய ரிசர்வ் வங்கி பீமாவரம் கோ-ஆபரேடிவ் அர்பன் ஃபாங்க் லிமிடெட், பீமாவரம் (ஆந்திரா) வழிகாட்டுதல் உத்தரவுகளை வெளியிடுகிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
இந்திய ரிசர்வ் வங்கி பீமாவரம் கோ-ஆபரேடிவ் அர்பன் ஃபாங்க் லிமிடெட், பீமாவரம் (ஆந்திரா) வழிகாட்டுதல் உத்தரவுகளை வெளியிடுகிறது
தேதி: ஏப்ரல் 15, 2019 இந்திய ரிசர்வ் வங்கி பீமாவரம் கோ-ஆபரேடிவ் அர்பன் ஃபாங்க் லிமிடெட், பீமாவரம் (ஆந்திரா) வழிகாட்டுதல் உத்தரவுகளை வெளியிடுகிறது இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) பொதுமக்களின் நலனுக்காக, பீமாவரம் கோ-ஆபரேடிவ் அர்பன் ஃபாங்க் லிமிடெட், பீமாவரம், ஆந்திராவுக்கு சில வழிகாட்டுதல் உத்தரவுகளை வழங்க வேண்டியது அவசியம் என்று கருதி, அதன்படி, இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும் வகையில்) பிரிவு 56 உடன் இணைந்த பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) இன் கீழ் உள்ள அதிகாரங்களை பயன்படுத்தி வெளியிடுகிறது. இதன்மூலம், மார்ச் 28, 2019 அன்று வர்த்தகம் முடிந்ததிலிருந்து இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளில் குறிப்பிட்டுள்ளபடியன்றி,பீமாவரம் கோ-ஆபரேடிவ் அர்பன் ஃபாங்க் லிமிடெட், பீமாவரம், ஆந்திரா கடன் மற்றும் முன் தொகைகளை அளிப்பதோ, புதுப்பிப்பதோ, ஏதேனும் முதலீடு செய்வதோ, கடனாக பணத்தைப் பெறுவது மற்றும் புது டெபாசிட்டுகளை ஏற்றுக்கொள்வது, ஏதேனும் பணம் பட்டுவாடா செய்வது, அல்லது பட்டுவாடா செய்ய ஒப்புக்கொள்வது, வேறு பொறுப்புகள் மற்றும் நிர்ப்பந்தங்களுக்காக அல்லது வேறு எதற்காகவோ பணம் செலுத்துதல், நிதிசார் ஒப்பந்தங்கள் / ஏற்பாடுகள் செய்துகொள்ளுதல், வங்கியின் சொத்துக்களில் எதையேனும் விற்றல், மாற்றல் ஏதேனும் மற்றும் இங்கு வழங்கப்பட்ட விதம் தவிர: அல்லது அவை சார்ந்த விவகாரங்களில் ஈடுபடுதல் கூடாது.
இந்திய ரிசர்வ் வங்கியால் எழுத்துப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாவிட்டால் அது வேறு எந்தப் பொறுப்பையும் ஏற்படுத்தாது அல்லது தடுக்காது. இந்திய ரிசர்வ் வங்கி மேலே குறிப்பிட்ட உத்தரவுகளை வெளியிட்டதைக் கருத்தில் கொண்டு, வங்கி நடத்துவதற்கான உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்து விட்டதாகக் கருதக் கூடாது. தனது நிதிநிலை மேம்படும்வரை, சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, வங்கி தனது வர்த்தகத்தைத் தொடரலாம். இந்திய ரிசர்வ் வங்கி, சூழ்நிலைக்கேற்றவாறு வழிகாட்டு உத்தரவுகளில் திருத்தங்கள் கொண்டு வரலாம். இந்த வழிமுறைகள் மார்ச் 28, 2019 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து ஆறு மாத காலத்திற்கு நடைமுறையில் இருக்கும், மேலும் அவை மீண்டும் மறுபரீசிலைனைக்கு உட்படும். அனிருதா டி.ஜாதவ் செய்தி வெளியீடு : 2018-2019/2454 |