பண விநியோகம் மற்றும் பரிமாற்றத் திட்டத்தின் மதிப்பாய்வு (CDES) - ஆர்பிஐ - Reserve Bank of India
பண விநியோகம் மற்றும் பரிமாற்றத் திட்டத்தின் மதிப்பாய்வு (CDES)
RBI/2017-18/136 மார்ச் 01, 2018 தலைவர் / நிர்வாக இயக்குநர் அன்புடையீர் பண விநியோகம் மற்றும் பரிமாற்றத் திட்டத்தின் மதிப்பாய்வு (CDES) பிப்ரவரி 07, 2018 தேதியிட்ட இருமாதத்திற்கு ஒருமுறை வெளியிடப்படும் பொருளாதாரக் கொள்கையைப் பற்றிய மதிப்பீட்டுப் பிரிவின் பாகம் B-ல் செய்யப்பட்ட அறிவிப்பைத் தயவு செய்து பார்க்கவும். இந்திய ரிசர்வ் வங்கியானது, வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதற்காக, அவ்வப்போது பண விநியோக நடவடிக்கைகளில் புதுப்புது தொழில்நுட்ப உத்திகளைப் புகுத்துவதற்கும், பல்வேறு இயந்திரங்களை நிறுவுவதற்கும் வங்கிகளுக்குப் பலவித ஊக்கங்களை வழங்கிவருகிறது. இந்தத் திட்டத்தின் குறிக்கோள் பெரும்பாலும் அடையப்பட்டுள்ளது. 2. எனவே, மறுமதிப்பீட்டில், பண மறுசுழற்சி இயந்திரங்கள் மற்றும் குறைவான மதிப்புடைய பணப்பட்டுவாடா செய்யும் ஏடிஎம்கள் நிறுவுவதற்கு வங்கிகளுக்கு ஜூலை 20, 2016 தேதியிட்ட முதன்மை சுற்றறிக்கை DCM (CC) No. G-4/03.41.01/2016-17-ஐ வழங்கப்பட்ட ஊக்கத் தொகையை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. 3. மேற்கூறிய அறிவுறுத்தல்கள் உடனடியாக அமலுக்கு வரும். வங்கிகளுக்கு சுற்றறிக்கையின் தேதி உட்பட அல்லது அதற்கு முன்பான தேதியிலோ, வழங்கப்பட்ட இயந்திரங்களைப் பொறுத்தமட்டில் ஜூலை 20, 2016 தேதியிட்ட முதன்மைச் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்ட பிராந்திய அலுவலகங்கள் மூலம் பணம் வழங்கப்படும். 4. சுற்றறிக்கை எமது www.rbi.org.in – என்ற இணைய தளத்தில் கிடைக்கும். இங்ஙனம் (அஜய் மிச்யாரி) |