RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S2

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78498559

முதல் நிலை (நகர்ப்புறக்) கூட்டுறவு வங்கிகள் முன்னுரிமைப் பிரிவிற்கு கடன் வழங்குதல் குறித்த - திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள்

RBI/2017-18/175
DCBR.BPD (PCB) Cir.No.07/09.09.002/2017-18

மே 10, 2018

தலைமை நிர்வாக அதிகாரி
அனைத்து முதல் நிலை (நகர்ப்புறக்) கூட்டுறவு வங்கிகள்

அன்புடையீர்

முதல் நிலை (நகர்ப்புறக்) கூட்டுறவு வங்கிகள் முன்னுரிமைப் பிரிவிற்கு கடன் வழங்குதல் குறித்த - திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள்

எங்களது அக்டோபர் 08, 2013 தேதியிட்ட, மேலே குறிப்பிடப்பட்ட பொருள் குறித்த சுற்றறிக்கை எண் UBD.CO.BPD.(PCB).MC.No.18/09.09.001/2013-14 மற்றும் அவ்வப்போது திருத்தங்கள் செய்யப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்ட ஜூலை 01, 2015 தேதியிட்ட DCBR.BPD.(PCB).MC.No:11/09.09.001/2015-16 முதன்மை சுற்றறிக்கையையும் பார்க்கவும். தற்போதுள்ள வழிகாட்டுதல்கள் மறு ஆய்வு செய்யப்பட்டு, மேலே குறிப்பிடப்பட்ட முதன்மை சுற்றறிக்கையிலுள்ள வழிகாட்டுதல்களுக்கு பதிலாக மாற்றியமைத்த வழிகாட்டுதல்களை (இணைப்பு 1-ன் படி) வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

2. திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின் முக்கிய அம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  1. மொத்தமாக முன்னுரிமைப் பிரிவுக்கு மற்றும் நலிவுற்ற பிரிவிற்கு வழங்கப்படும் கடனுக்கான இலக்கு என்பது “சரிசெய்யப்பட்ட நிகர வங்கிக் கடன்” (ANBC) அளவில் அல்லது “இருப்பு நிலைக்கு வெளியே படுநிலையிலுள்ளவற்றிற்கு சமமானகடன் அளவில் முறையே 40 சதவிகிதம் மற்றும் 10 சதவிகிதம் (இதில் எது அதிகமோ அது) என்று இதுவரையில் இருந்தது போலவே தொடர்ந்திடும்.

  2. வேளாண்மை – நேரடியான மற்றும் மறைமுகமான என்று வேறுபடுத்திப் பார்ப்பது கைவிடப்படும்.

  3. உணவு மற்றும் விவசாய பதனப்படுத்தும் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வங்கிக் கடன்கள் விவசாயக் கடனின் ஒரு பகுதியாகக் கருதப்படும்.

  4. நடுத்தர நிறுவனங்கள், சமுதாயக் கட்டமைப்பு, புதுப்பிக்கப்படத்தக்க சக்தி ஆகியவை முன்னுரிமைப் பிரிவாகக் கருதப்படும்.

  5. குறு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனுக்கான இலக்கு என்பது “சரிசெய்யப்பட்ட நிகர வங்கிக் கடன்” (ANBC) அல்லது “இருப்பு நிலைக்கு வெளியே படுநிலையிலுள்ளவற்றிற்கு ஈடானகடன்“(எது அதிகமோ அது) இவற்றில் 7.5 சதவிகிதம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  6. கல்வி – உள்நாட்டில், வெளிநாட்டில் கல்வி என்ற பாகுபாடு கைவிடப்படுகிறது.

  7. நுண்கடன் என்பது முன்னுரிமைப் பிரிவில் தனி அங்கம் வகிக்காது.

  8. முன்னுரிமைப் பிரிவின் கீழ் வரத் தகுந்த வீட்டு வசதிக் கடன்களுக்குரிய வரம்புகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.

  9. காலாண்டு மற்றும் ஆண்டு அறிக்கைகள் மூலமாக முன்னுரிமைப் பிரிவு மதிப்பீடு கண்காணிக்கப்படும்.

3. திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் சுற்றறிக்கையில் இடப்பட்ட தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும். இந்த சுற்றறிக்கையின் தேதிக்கு முன்னர் வழங்கப்பட்ட வழிகாட்டுதலின் கீழ் அனுமதிக்கப்பட்ட முன்னுரிமைப் பிரிவின் கடன்கள் முதிர்வு/புதுப்பித்தல் வரை முன்னுரிமைத் துறையின் கீழ் தொடர்ந்து வகைப்படுத்தப்படும்.

4. முன்னுரிமைப் பிரிவு இலக்குகளை எட்டுதல்

பல்வேறு நோக்கங்களுக்காக ஒழுங்குமுறை ஒப்புதல்கள்/அனுமதி வழங்கும்போது முன்னுரிமைப் பிரிவு இலக்குகளை பூர்த்தி செய்வது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஏப்ரல் 01, 2018 முதல் ஒரு நகர்ப்புறக் கூட்டுறவு வங்கியை நிதி ரீதியாகவும், நன்கு நிர்வகிக்கப்பட்டதாகவும் (Financially Sound and Well Managed – FSWM) வகைப்படுத்துவதற்காக முன்னுரிமைப் பிரிவு இலக்குகளை பூர்த்தி செய்வது ஒரு தகுதித் தேவையாகக் கருதப்படும். அக்டோபர் 13, 2014 மற்றும் ஜனவரி 28, 2015 தேதியிட்ட சுற்றறிக்கைகளில் (UBD.CO.LS. (PCB). Cir.No.20/07.01.000/2014-15 and CBR.CO.LS. (PCB) Cir.No.4/07.01.000/2014-15) கூறப்பட்டுள்ள தகுதித் தேவைகளுடன் கூடுதலாக, இது கருத்தில் கொள்ளப்படும்.. 2018-19 நிதியாண்டில், முன்னுரிமைப் பிரிவு இலக்கை/துணை இலக்கை அடைவதில் உள்ள பற்றாக்குறை மார்ச் 31, 2018-ன் நிலவரப்படி மதிப்பீடு செய்யப்படும். 2019-20 நிதியாண்டிலிருந்து, ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும் முன்னுரிமைப் பிரிவு இலக்கு/துணை இலக்கு சாதனைகளின் சராசரியின் அடிப்படையில் நிதியாண்டின் இறுதியில் மதிப்பீடுகள் செய்யப்படும். விளக்க உதாரணம் இணைப்பு-2ல் கொடுக்கப்பட்டுள்ளது.

இங்ஙனம் ஒப்பம்

(நீரஜ் நிகம்)
தலைமைப் பொது மேலாளர்

இணைப்புகள் –
பிற்சேர்க்கை 1 மற்றும் 2

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?