RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78493746

மாற்றியமைக்கப்பட்ட விவசாய கடன் அட்டைத் (KCC) திட்டம்

RBI/2016-17/84
FIDD No. FSD.BC.18/05.05.010/2016-17

அக்டோபர் 13, 2016

தலைவர் / நிர்வாக இயக்குநர் /
தலைமை நிர்வாக அதிகாரி
[அனைத்துப் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
(பிராந்திய கிராமப்புற வங்கிகள் நீங்கலாக)]

அம்மையீர் / ஐயா

மாற்றியமைக்கப்பட்ட விவசாய கடன் அட்டைத் (KCC) திட்டம்

மேற்குறிப்பிட்ட பொருள் குறித்த ஆகஸ்டு 07, 2012 தேதியிட்ட சுற்றறிக்கை RPCD FSD BC No. 23/05.05.09/2012-13-ஐப் பார்க்கவும்.

2. பின்னிணைப்பில் குறிப்பிட்டுள்ளபடி, திருத்தியமைக்கப்பட்ட KCC திட்டத்தில் பாரா 13-ல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட அறிவுறுத்தல்களை அனைத்து வங்கிகளும் கருத்தில் கொண்டு, அவற்றை உடனடியாக அமல்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இங்ஙனம்

(உமா சங்கர்)
தலைமைப் பொதுமேலாளர்

இணைப்பு – மேலே உள்ளதுபோல


இணைப்பு

விவரம் சுற்றறிக்கையின்படி அறிவுறுத்தல்கள் திருத்தப்பட்ட அறிவுறுத்தல்கள்
பாரா – 13
இதர அம்சங்கள்

RPCD FSD BC No. 23/05.05.09/ 2012-13, ஆகஸ்டு 07, 2012 தேதியிட்டது.

13.ii. கட்டாயமாக்கப்பட்டுள்ள பயிர் காப்பீடு தவிரவும், கிஸான் கிரெடிட் கார்டு வைத்திருப்பவருக்குச் சொத்துக் காப்பீடு, விபத்துக் காப்பீடு, மருத்துவக் காப்பீடு ஆகியவற்றையும் தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்கப்பட்டு, அந்த கிரெடிட் கார்டு மூலமாகவே பிரீமியம் தொகை செலுத்தப்பட வசதி செய்து தர வேண்டும். காப்பீட்டு நிறுவனம் மற்றும் வங்கியுடனான ஒப்பந்த விகிதப்படி, பிரீமியம் தொகை வங்கியிலிருந்து, கிரெடிட் கார்டு கணக்கிலிருந்தும் செலுத்தப்படவேண்டும். விவசாய பயனாளிகள் காப்பீட்டுத் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டு, விண்ணப்பமளிக்கும் நிலையிலேயே (பயிர் காப்பீடு திட்டம் தவிர அது கட்டாயம், ஆகவே), பயனாளியின் ஒப்புதல் பெறப்படவேண்டும்).

13.ii. கட்டாயமாக்கப்பட்டுள்ள பயிர் காப்பீடு தவிரவும், கிஸான் கிரெடிட் கார்டு வைத்திருப்பவருக்குச் சொத்துக் காப்பீடு, விபத்துக் காப்பீடு, மருத்துவக் காப்பீடு ஆகியவற்றையும் தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்கப்பட்டு, அந்த கிரெடிட் கார்டு மூலமாகவே பிரீமியம் தொகை செலுத்தப்பட வசதி செய்து தர வேண்டும். அந்தந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் நிபந்தனைகளின்படி பிரீமியம் தொகை வங்கி / விவசாயினால் பகிர்ந்தளித்துச் செலுத்தப்பட வேண்டும். விவசாய பயனாளிகள் காப்பீட்டுத் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டு விண்ணப்பமளிக்கும் நிலையிலேயே (பயிர் காப்பீடு திட்டம் தவிர அது கட்டாயம், ஆகவே) பயனாளியின் ஒப்புதல் பெறப்படவேண்டும்).

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?