RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S2

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78530264

500 மற்றும் 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்படுகின்றன – திருத்தங்கள்

அறிவிப்பு எண் 146
Ref. No. DCM (Plg)/1323/10.27.00/2016-17

நவம்பர் 21, 2016

தலைவர் / நிர்வாக இயக்குநர் /
தலைமை நிர்வாக அதிகாரி
பொதுத்துறை வங்கிகள் / தனியார் துறை வங்கிகள் /
அயல்நாட்டு வங்கிகள் / பிராந்திய கிராமப்புற வங்கிகள் /
நகரக் கூட்டுறவு வங்கிகள் / மாநில கூட்டுறவு வங்கிகள்
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்

அன்புடையீர்

500 மற்றும் 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி
செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்படுகின்றன –
திருத்தங்கள்

மேற்குறிப்பிட்ட பொருள் குறித்த எங்களின் நவம்பர் 8, 2016 தேதியிட்ட DCM. (Plg) No. 1226/10.27.00/2016-17-ஐப் பார்க்கவும்.

2. மறு ஆய்வின் பேரில் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கான வரம்புகளில் பின் வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

  1. விவசாயிகளுக்கு: விவசாயிகள் தங்களின் சேமிப்பு / கடன் கணக்குகளிலிருந்து (கிஸான் கிரெடிட் கார்டு வரம்பு உட்பட) ஒரு வாரத்திற்கு ரூ. 25,000 வரை பணம் எடுக்கலாம். ஆனால், இத்தகு கணக்குகளில் நடப்பிலுள்ள கே.வொய்.சி (KYC) நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படிருக்கவேண்டும்.

  2. APMC சந்தைகள் / மண்டிகளில் பதிவு செய்துள்ள வியாபாரிகளுக்கு

    தற்சமயம் நடப்புக் கணக்கு வைத்திருப்போர் அவற்றிலிருந்து ஒரு வாரத்திற்கு ரூ. 50,000 வரை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பணம் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே வசதி APMC சந்தைகள் / மண்டிகளில் பதிவு செய்துள்ள வியாபாரிகளுக்கு இப்போது அளிக்கப்படுகிறது. இத்தகு வியாபாரிகள் KYC நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்ட, கடந்த 3 மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக செயல்பாட்டில் உள்ள நடப்புக் கணக்குகளிலிருந்து ஒரு வாரத்திற்கு ரூ. 50,000 வரை பணம் எடுக்கலாம்.

3. பெற்றுக் கொண்டமைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

இங்ஙனம்

(P.விஜய குமார்)
தலைமைப் பொதுமேலாளர்

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?