இந்திய ரிசர்வ் வங்கியின் உடனுக்குடன் செய்யப்படும் மொத்த தீர்வு (RTGS) வங்கி வாடிக்கையாளருக்காக - ஆர்பிஐ - Reserve Bank of India
இந்திய ரிசர்வ் வங்கியின் உடனுக்குடன் செய்யப்படும் மொத்த தீர்வு (RTGS) வங்கி வாடிக்கையாளருக்காக
ஆகஸ்ட 16, 2004
இந்திய ரிசர்வ் வங்கியின் உடனுக்குடன் செய்யப்படும் மொத்த தீர்வு (RTGS), வாடிக்கையாளரின் பரிமாற்றத்தை மிகவிரைவாக முடித்துக் கொடுக்கவேண்டுமென்ற நேரிடை இடையீடில்லா செயற்பாங்கு முறைமை சாத்தியமாக்கியுள்ளது. இதனை இன்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. நேரிடை இடையீடில்லா செயல்பாங்கு வாடிக்கையாளர் பரிமாற்றங்கள் கடன் அறிவிப்பைப் பெற்றதும் வங்கிகளை வாடிக்கையாளரை கணக்குகளில் எவ்வித குறிப்பேடுகளின் தலையீடுமின்றி நேரடியாக வரவுவைக்கச் செய்கின்றன. இது பங்குமாற்றுக் களத்தில் T+1 தீர்வை அறிமுகப்படுத்த வழிவகுக்கும். நாடெங்கிலும் பெருமளவில் வங்கி வணிகத்தில் ஈடுபட்டுள்ள 134 முதன்மை மையங்களின் 840 கிளைகளில் உடனுக்குடன் செய்யப்படும் மொத்த தீர்வு (RTGS) முறைமைவில் பங்கு பெறுகின்றன.
பெறும் நிலையிலுள்ள வங்கி, பயன்பெரும் வாடிக்கையாளரின் கணக்கில், அதனுடைய பட்டுவாடா முறையமைவு நுழைவாயிலில் கடன் / வரவு அறிவிப்பு வரப்பெற்ற இரண்டு மணி நேரத்தில் வரவு வைக்கவேண்டிய கடமையுடையது என இந்திய ரிசர்வ் வங்கி எடுத்துரைத்தது. வங்கி வாடிக்கையாளர்களின் வசதிக்கான உடனுக்குடன் செய்யப்படும் மொத்த தீர்வு (RTGS) இணைப்பின் கீழ், இவ்வசதியை வழங்கும் வங்கிகளின் கிளைகள் பட்டியல் இந்திய ரிசர்வ் வங்கி இணையதளத்தில் (www.rbi.org.in) உள்ளது.
மார்ச் 26, 2004ல் இந்திய ரிசர்வ் வங்கியின் உடனுக்குடன் செய்யப்படும் மொத்த தீர்வு (RTGS) முறைமைவு கணனியில் நேரடிக்காணலுக்கு உட்படுத்தப்பட்டது என்பதை நினைவு கூறலாம். தொடக்கத்தில் வங்கிகளுக்கிடையான பரிமாற்றத் தீர்விற்கு மட்டுமே இது பயன்பட்டது. ஏப்ரல் 29, 2004 முதல் உடனுக்குடன் செய்யப்படும் மொத்த தீர்வு (RTGS) முறைமைவு வாடிக்கையாளர்கள் எல்லாவித பரிமாற்றத்தீர்வுகளுக்கும் இச்சேவை நீட்டிக்கப்பட்டது. உடனுக்குடன் செய்யப்படும் மொத்த தீர்வு (RTGS) அறிவார்ந்த கட்டுக்கோப்புக்குட்பட்ட இன்றியமையா பணம் வழங்கு முறையமைவாகும். அது இந்நாட்டின் வங்கிகளையும் நிதிசார் அமைப்புகளையும் தன்னுள் அடக்கியதாகும். இது பாதுகாப்புமிக்க மின்னணுமுறை நிதி மாற்றித்தரும் முறையமைவாகும். அது நாட்டின் எந்தப் பகுதிக்கும் எந்தத் தொகைக்கும் வங்கிகளுக்கு இடையேயும் வாடிக்கையாளர் சார்ந்த வங்கிகளுக்கிடையேயான பரிமாற்றங்களை மிகவிரைவாக உடனுக்குடன் தீர்த்து முடித்து வைக்கும் சேவைமுறையாகும். இந்நாட்டின் அட்டவணைக்குட்பட்ட எல்லா வங்கிகளும் உடனுக்குடன் செய்யப்படும் மொத்த தீர்வு (RTGS) முறையமைவின் பங்குபெற்று மின்னணு முறையில் வாடிக்கையாளர்களுக்கு தொகை பரிமாற்றச் சேவையை வழங்க முடியும். இப்போது இம்முறையமைவில் 72 வங்கிகள் வங்கிகளுக்கிடையேயான பரிமாற்றத் தீர்வில் பங்கேற்கின்றன. மும்பையில் வங்கிகளுக்கிடையேயான பரிமாற்றத்தின் மொத்த மதிப்பில் 90 விழுக்காடு இதன் பங்களிப்பாகும்.
அல்பனா கில்லாவாலா
தலைமை பொது மேலாளர்
பத்திரிகை வெளியீடு 2004-2005/188