உடனுக்குடனான மொத்த தீர்வு (RTGS) பரிவர்த்தனைகள்
RBI/2008-2009/426 ஏப்ரல் 8, 2009 தலைவர்/ நிர்வாக இயக்குநர் அன்புடையீர், உடனுக்குடனான மொத்த தீர்வு (ஆர்.டி.ஜி.எஸ்.-RTGS) பரிவர்த்தனைகள் ஆர்.டி.ஜி.எஸ் பரிவர்த்தனைகளின் பரிமாணம் மிகவேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 2008 மார்ச்சில் 0.72 மில்லியனாக இருந்த ஆர்.டி.ஜி.எஸ் பரிவர்த்தனைகள் 2009 மார்ச்சில் 1.94 மில்லியனாக அதிகரித்தது. வாடிக்கையாளர் பரிவர்த்தனைகளை ஆர்.டி.ஜி.எஸ் மூலம் செய்வது ஆர்.டி.ஜி.எஸ் பரிவர்த்தனைகளில் 89% ஆக இருக்கும். சமீபத்தில் பிரதான வங்கிகளுடன் நடந்த சந்திப்பில், பயன்படுத்துவோருக்கு மிகவும் உபயோகமாக இருக்கவேண்டும் என்ற நோக்கில் வாடிக்கையாளர்களின் ஆர்.டி.ஜி.எஸ் பரிவர்த்தனைகளின் முழுபரிமாணம் பற்றி நாங்கள் சீராய்வு செய்தோம். இவ்விவாதங்களின் அடிப்படையில் ஆர்.டி.ஜி.எஸ் அங்கத்தினர்கள் நிறைவேற்ற வேண்டிய சில முடிவுகள் எடுக்கப்பட்டன. 2. DPSS(CO)No.1607/04.04.002/2007-2008, ஏப்ரல் 7, 2008 தேதியிட்ட எங்களது சுற்றறிக்கை வாயிலாக அனைத்து ஆர்.டி.ஜி.எஸ் அங்கத்தினர்களுக்கும் ரிசர்வ் வங்கி கம்பி மூலம் பணப் பரிமாற்றம் தொடங்கியபோது அதற்கான வழிகாட்டு நெறிகளை நினைவு கூறவேண்டும். R 41 பணிமுறை அறிவிப்பு படிவத்தின் மாதிரி இணைக்கப்பட்டுள்ளது. அனுப்புபவர் மற்றும் பெறுபவர் பற்றிய விவரங்கள் எவ்வாறு பணிமுறை அறிவுப்பு படிவத்தில் இடம்பெற வேண்டும் என்பதும் விளக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி பணிமுறை அறிவுப்பு படிவத்தின் (R 41) 5500 மற்றும் 5561 என்ற எண்கள் உள்ள இடங்களில் வங்கிகள் தங்களது முழு விவரங்களையும் அளித்திட வேண்டும்.களம் 5500
களம் 5561
3. சில வங்கிகள் பணிமுறை அறிவிப்பில் தேவையான விவரங்களைக் கொடுக்கின்றன. மற்றவைகள் வழிகாட்டு நெறிகளை அமல்படுத்தவில்லை. எனவே மீண்டும் வலியுறுத்தப்படுவது என்னவென்றால் நேரடியாக நடைமுறைப்படுத்தும் சூழலில் (Straight through processing (STP)) தர நிர்ணயம் என்பது மிகவும் அவசியம். பணிமுறை அறிவிப்பு படிவத்தில் ஒரே சீரான தன்மை எஸ்.டி.பி. (STP)யின் வெற்றிக்கு முக்கிய மின்தேவையாகும். 4. ஆர்.டி.ஜி.எஸ். வாடிக்கையாளர்கள் பற்றுவரவ் ஏடுகள்/கணக்கு அறிக்கைகளில் பல வங்கிகள் தரும் தகவல்கள் ஒரே சீரான தன்மை இல்லை என்பது பற்றி புகார் அளிக்கிறார்கள். சில வங்கிகள் “ஆர்.டி.ஜி.எஸ். வரவு” என்று மட்டும், விவரங்கள் இல்லாமல் கொடுத்து விடுகின்றன. மற்ற சில வங்கிகள் வங்கிக்கணக்கு எண் அல்லது பரிவர்த்தனைகளின் யு.டி.ஆர். (UTR)எண் போன்றவற்றை அளிக்கின்றன. இது பல்வேறு வங்கிகளின் ஒருங்கிணைக்கப்பட்ட வங்கி வசதியால் சாத்தியமாகிறது. பணிமுறை வடிவமைப்பில் உள்ள பல்வேறு கள அமைப்புகளிலிருந்து பெறப்படும் தகவல் அதற்கு உதவுகிறது. இதனால் வாடிக்கையாளர் ஒரே தேதியில் வந்த பல்வேறு ஆர்.டி.ஜி.எஸ் வரவுகளை எங்கெங்கிருந்து வந்தன என்று புரிந்து கொள்வதிலும் பரஸ்பர தீர்வுகளிலும் சிரமமும் ஏற்படுகிறது. 5. இதன்மூலம் அறிவுறுத்தப்படுவது என்னவென்றால்
இந்த நோக்கத்திற்காக, தகவல் கள எண்கள் 5500 மற்றும் 5561 ஆகியவற்றில் அனைத்து வங்கிகளாலும் ஒரே சீராக மேலே குறிப்பிட்டவாறு வழங்கப்பட வேண்டும். வங்கிகளின் CBS நன்கு சீரமைக்கப்பட்டு கள எண் 5500ல் இரண்டாவது வரியில் ஆகியவற்றில் பெறுபவரின் கணக்கு அறிக்கை/பற்றுவரவு ஏடு மற்றும் கள எண் 5561ல் இரண்டாவது வரியில் அனுப்புபவரது கணக்கு அறிக்கை/பற்றுவரவு ஏடு ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும். இது தவிர, வேறு ஏதேனும் தகவல்கள் தேவை/ பயனுள்ளவை என வங்கிகள் கருதினால் அவற்றையும் வங்கிகள் அளிக்கலாம். 6. அனைத்து ஆர்.டி.ஜி.எஸ் வங்கிகளும் 2009 ஜுன் 1ஆம் தேதிக்குள் மேலே குறிப்பிட்ட வழிகாட்டுதல்களைக் கடைபிடிக்க நடவடிக்கைகளை எடுக்கவேண்தும். பெற்றமைக்கு ஒப்புதல் அளிக்கவும் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய அறிக்கையை காலபோக்கில் அனுப்பிடவும்.தங்கள் உண்மையுள்ள (G. பத்மநாபன்) |
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: