RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

आरबीआई की घोषणाएं
आरबीआई की घोषणाएं

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78442093

1949 வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் - பிரிவு 23
தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் மூலமாக மாற்றப்படும் மூன்றாவது நபர் பண பரிவர்த்தனைகள்

DBOD.NO.BL.BC.5/22.01.001/2003 ஜூலை 23, 2003

பிராந்தியக் கிராம வங்கிகள் உள்ளூர் வங்கிகள் நீங்கலாக

அட்டவணையிலுள்ள அனைத்து வங்கிகளுக்கும்

அன்புடையீர்

 1949 வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் - பிரிவு 23
தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் மூலமாக மாற்றப்படும் மூன்றாவது நபர் பண பரிவர்த்தனைகள்

2002 ஜூலை 18 தேதியிட்ட எங்கள் தொகுப்புச் சுற்றறிக்கை DBOD.BL.BC.5/ 22.01.001/2002, பாரா 12.3 ஐப் பார்க்கவும். ஒரே இடம்/அல்லது பல்வேறு இடங்களில் கணக்குகள் வைத்துக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர் ஒருவர் தனது கணக்குகளுக்குள்ளாக மட்டுமே, தானியங்கி பணம் வழங்கு இயந்திரத்தின் மூலம் மாற்றிக் கொள்ளலாம்.

2. வங்கிகளின் வேண்டுகோள்களின் அடிப்படையில், ஒரு வாடிக்கையாளர் தான் கணக்கு வைத்திருக்கும் அதே வங்கியில் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் அதே வங்கியில் கணக்கு வைத்திருக்கும் மற்றொரு நபர்கு இயந்திரங்கள் மூலமாக பணத்தை மாற்றிக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கான உத்தரவும், அது சம்பந்தப்பட்ட ஆவணங்களும், வங்கிக்கும் வாடிகையாளருக்கும் இடையே ஒப்பந்தம் மூலம் தீர்மானிக்க வேண்டும். இருதாராருக்குமுள்ள உரிமைகளும் கடமைகளும் இந்த ஒப்பந்தத்தில் தெளிவாக, விரிவாக வரையறுத்துக் கொள்ளப்பட வேண்டும். சட்டப்படிச் செல்லத்தக்கவையாகவும் இருக்க வேண்டும். இயந்திரங்கள் மூலம் மூன்றாவது நபர் பணமாற்றங்கள் செய்ய அநுமதிக்கப்படும் போது, அதனுடைய முழுப் பொறுப்பு/விளைவுகளிலிருந்து வங்கி தன்னை விடுவித்துக் கொள்ளும் வகையில் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.

3. கணினிமயக்கப்பட்ட வங்கிச் செயல்பாடுகள் மிகுந்து இருக்கும் சூழ்நிலையில் மிக நல்ல பழக்கவழக்கங்களின் தொகுப்பு மற்றும் இணையதள வங்கிச் செய்யல்பாடுகளுக்கான வழிகாட்டுதல்களில் கூறியுள்ளபடி, பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். “உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள்” வழிமுறைகள் 1998 பிப்ரவரி 4 தேதியிட்ட DBS.CO.ITC.BC.10/ 31.90.001/97-98, மற்றும் 2001 ஜூன் 14 தேதியிட்ட DBOD.COMP.BC.NO.130/ 07.03.23/2000-01 ஆகிய சுற்றறிக்கைகளின் அறிவுருத்தல்கள் ஆகியவைகளைக் கடைப்பிடித்து பின்பற்ற வேண்டும்.

4. 2002 ஜூலை 18 தேதியிட்ட தொகுப்புச் சுற்றறிக்கை DBOD.BL.BC.5/22.01.00/2002 பாரா 12.3 மாற்றி அமைக்கப்படுகிறது. தானியியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களின் பணிகள் கீழே கண்டவாறு மாற்றி அமைக்கப்படுகின்றன. “ஒரு கணக்கிலிருந்து வேறு ஒரு கணக்குப் பணம் மாற்றுவது என்பது பல கணக்குகளுடைய ஒரே வாடிக்கையாளர் அல்லது பல வாடிக்கையாளர்களுக்கும் அதே வங்கியின் அதே இடத்தில் அல்லது நம் நாட்டிற்குள் பல இடங்களில் மட்டுமே பரிவர்த்தனை மாற்றங்கள் செய்யலாம்”.

நம்பிக்கையுள்ள

சீ.ஆர். முரளிதரன்
தலைமைப் பொது மேளாலர்

மேற்குறிப்பு எண் DBOD.No.BL. /22.01.001/2003 அதே தேதி

ரிசர்வ் வங்கிக் கிளைகள் அனைத்திற்கும் உரிய நடவடிக்கைகளுக்காக நகல் அனுப்பப்படுகிறது.

ஆர்.சி. மிட்டல்
பொது மேலாளர்

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?