RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78440360

வங்கி ஒழுங்கு முறைச் சட்டம் 1949 - பிரிவு 23 - வீட்டு வாயிலில் வங்கிப் பணி

RBI/2004-05/449
DBOD.No.BL.BC.86/22.01.001/2004-05

ஏப்ரல் 30, 2005

பிராந்திய கிராம வங்கிகளைத் தவிர
அட்டவனையிலுள்ள வணிக வங்கிகள்

அன்புடையீர்,

 வங்கி ஒழுங்கு முறைச் சட்டம் 1949 - பிரிவு 23 - வீட்டு வாயிலில் வங்கிப் பணி

1983 மே 24 தேதியிட்ட எங்களது சுற்றறிக்கை DBOD.No.BL.BC. 42/C-168-83ஐப் பார்க்கவும். ரிசர்வ் வங்கியிலிருந்து உரிய அனுமதியைப் பெறாமல், வங்கிகள் வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திலேயே வங்கிச் சேவைகளைச் செய்யக்கூடாது என அறிவுறுத்தியிருந்தோம்.

2. ரயில்வே போன்ற பல அரசு நிறுவனங்கள், தாங்கள் வருவித்த பணத்தை வங்கியில் செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு வங்கிச் சேவைகளை தங்கள் அலுவலக வளாகத்திலேயே செய்து முடித்திட கோரிக்கைகள் விடுத்ததையும், வங்கிகளிடமிருந்து இது சம்பந்தமாக வந்த விருப்ப விண்ணப்பங்களையும் பரிசீலித்ததில், 1949 வங்கி ஒழுங்கு முறைச் சட்டம் பிரிவு 23ன் கீழேயே, வாடிக்கையாளரின் வளாகத்திலேயே வங்கிப் பணி/சேவைகளைச் செய்திட வங்கிகள் ஒழுங்குமுறைகளை வகுத்துத் தங்கள் இயக்குநர் குழுவின் ஒப்புதலோடு ரிசர்வ் வங்கியின் அனுமதிக்காகச் சமர்ப்பிக்க வேண்டும்.

3. மத்திய மாநில அரசுகளின் இலாகாக்களிடமிருந்து, பணம்/ காசோலைகள் இவைகளே வங்கிகள் அவர்கள் அலுவலகத்திற்கே சென்று பெற்றுக்கொண்டு வங்கிச் சேவைகளை மேற் கொள்ளலாம்.

உங்கள் உண்மையுள்ள

ஆனந் சின்ஹா
தலைமை பொது மேலாளர் பொறுப்பு

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?