RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S3

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78450232

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் 2004 - வைப்பாளர் இறந்துவிட்டால் கொடுபட வேண்டிய வட்டி விகிதத்தின்மேல் விளக்கம்.

RBI/2006-07/171

 

DGBA.CDD.No.H-7667/15.15.001/2006-07                                   நவம்பர் 10, 2006

பொது மேலாளர்

அரசு கணக்குத்துறை- தலைமை அலுவலகம்

பாரத/இந்தூர்/பாட்டியால/பிகானெர் மற்றும் ஜெய்பூர்/சௌராஷ்டிரா/ திருவாங்கூர்/ஹைதராபாத்/மைசூர் வங்கிகள்

அலகாபாத் வங்கி/ பாங்க் ஆப் பரோடா வங்கி/ பாங்க் ஆப் இந்தியா/

பாங்க் ஆப் மஹாராஷ்ட்ரா/கனரா வங்கி/

சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா/கார்ப்பரேஷன் வங்கி/

தேனா வங்கி/இந்தியன் வங்கி/இந்தியன் ஓவர்சீஸ் வங்கி/

பஞ்சாப் நேஷனல் வங்கி/சின்டிகேட் வங்கி/யூகோ வங்கி/

யூனியன் பாங்க் ஆப் இந்தியா/யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா/

ஐசிஐசிஐ பாங்க் லிட்/ விஜயா வங்கி

 

அன்புடையீர்,

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் 2004 -

வைப்பாளர் இறந்துவிட்டால் கொடுபட வேண்டிய வட்டி

விகிதத்தின்மேல் விளக்கம் 

 

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் 2004இல் முதலீடு செய்த  வைப்பாளர் இறந்துவிட்டால் அவரது கணக்கை முடித்து வைப்பது சம்பந்தமாக இந்திய அரசால் கொண்டு வரப்பட்ட மேலே சொன்ன திட்டத்தின் விதி 8(3) ஐயும் அதன்  அறிவிப்பு G.S.R.490(E) 2004 ஆகஸ்ட் 2 தேதியிட்டதையும் பார்க்கவும்.

 

2. வைப்பின் முதிர்வு காலத்திற்கு முன்னரே வைப்பாளர் இறந்துவிட்டால் அவரது கணக்கை முடித்து வைக்க அவரது வாரிசுதாரர்கள் வங்கியை அணுகினால், வாரிசுதாரர்கள், வைப்பாளர் இறந்த தேதியிலிருந்து வைப்பு முடிக்கப்படும் தேதி வரை சேமிப்புக் கணக்கிற்குரிய வட்டி அளிக்கத் தகுதியுடையவர்கள் என்று இந்திய அரசின் நிதி அமைச்சகம் தெளிவு படுத்தியிருக்கிறது.

 

3. உங்கள் கிளைகளுக்கெல்லாம் இச்சுற்றறிக்கையின் விவரங்களைத் தெரியப்படுத்தி நடைமுறைப்படுத்த ஆவன செய்யவும்.

 

4 கிடைத்தமைக்கு ஒப்பு அளிக்க

 

 

நம்பிக்கையுள்ள 

 

 

 

(இம்டெயாஸ் அகமது)

உதவிப் பொது மேலாளர்

 

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?