RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S1

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78535116

காணாமல்போன நபர்களின் கேட்புகளுக்கு தீர்வு

RBI/2007-08/308
DBOD.No.Leg.BC.80/09.07.005/2007-08                         

           மே 2, 2008

அனைத்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
(பிராந்திய கிராமிய வங்கிகள் தவிர)

அன்புடையீர்,

காணாமல் போன நபர்களின் கேட்புகளுக்கு தீர்வு

காணாமல் போன நபர்களின் நியமிக்கப்பட்டவர்கள்/சட்டபூர்வ வாரிசுதாரர்கள் ஆகியோரின் கேட்புக்கு வங்கிகள் கடைபிடிக்கவேண்டிய முறைமையைப் பற்றி கேள்வி எழுந்துள்ளது.

2. காணாமல் போன நபர்களின் கேட்புகளுக்கு தீர்வு அளிப்பது இந்திய சாட்சி சட்டம் 1872ன்படி 107/108 ன் ஷரத்துகள்படி நிர்வகிக்கப்படுகிறது.  பிரிவு 107 என்பது தொடர்தல் பற்றி அறிதலையும் பிரிவு 108 இறப்பைப்பற்றி அறிதலையும் சொல்கின்றன.  இந்திய சாட்சி சட்டத்தின் பிரிவு 108ன் ஷரத்துகளின்படி, ஒருவர் காணாமல் போய் 7 வருடங்கள் கழிந்த பிறகுதான் இறப்பைப்பற்றி அறியும் பிரச்சனை எழுப்பப்படும்.  அதன்படி நியமிக்கப்பட்டவர்/ சட்டபூர்வ வாரிசுகள் ஒரு தகுதியற்ற நீதிமன்றத்தின் முன் வாடிக்கையாளரின் இறப்பை பிரிவு 107/108ன்கீழ் வெளிப்படையாக தெரிவித்து விடவேண்டும்.  நீதிமன்றம் அவனோ/அவளோ இறந்துவிட்டதாக முடிவுக்கு வரும்போது அதன் அடிப்படையில் காணாமல் போன நபரின் கேட்பு தீர்த்து வைக்கப்படும்.

3.  வங்கிகள் ஒவ்வொரு தனிப்பட்ட நிகழ்வின் சூழலுக்கு ஏற்றவாறும் மற்றும் அதற்குரிய சட்ட ஆலோசனையை கருத்தில்கொண்டும், காணாமல் போனவரின் கேட்புகளுக்கு தீர்வு காணும் கொள்கையை உருவாக்கவேண்டும்.  மேலும், சாதாரண மனிதனுக்கு தேவையில்லாத கஷ்டத்தையும் மற்றும் அசெளகரியத்தையும் தவிர்க்கும் நிர்பந்தத் தேவைக்காக வங்கிகள் தங்களது இடர்வரவு நிர்வாக முறைமைகளையும் கருத்தில் கொண்டு ஒரு தொடக்க நிலை விளிம்பை நிர்ணயிப்பார்கள்.  அந்த விளிம்பிற்குள் காணாமல் போன நபர்களின் கேட்பை  (i) காவல் துறையினரால் தேட இயலாத என்ற அறிக்கை மற்றும் முதல் தகவல் அறிக்கை மற்றும் (ii) இழப்பெதிர் காப்பு கடிதம் போன்ற ஆவணங்கள் தவிர வேறு எந்த ஆவணமும் கேட்காமல் தீர்வு செய்வார்கள்.

தங்கள் உண்மையுள்ள

(பிரஷாந்த் சரண்)
தலைமைப் பொது மேலாளர்-பொறுப்பு

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?